இது உண்மையா ? தினமும் சேலை கட்டும் பெண்களுக்கு கேன்சர் வருமாம்..!
சமீபத்தில் நடந்த ஆய்வில் தினமும் சேலை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த புற்றுநோய்க்கு பெயரே சேலை புற்றுநோயாம்.
சேலை கட்டும் பெண்கள் உள்பாவாடையை இருகக் கட்டும்போது இடுப்பில் எரிச்சல் ஏற்படுகிறது. இந்த தொடர் எரிச்சலால் அந்த இடத்தில் உள்ள தோலின் நிறம் மாறுகிறது. ஆனால் இந்த விவகாரம் பெரிதாவது வரை பெரும்பாலான பெண்கள் கண்டுகொள்வதில்லை. அதே சமயம் இந்த புற்றுநோய் கால்சட்டை மற்றும் பெல்ட் அணிவதால் வராது. அதற்கு காரணம் கால்சட்டை பட்டன் போடும் இடமும் சரி, பெல்டும் சரி அகலமாக இருப்பதால் அழுத்தம் பரவலான இடத்தில் ஏற்படுகிறது. ஆனால் உள்பாவாடை நாடா சிறியதாக இருப்பதாக அழுத்தமும் குறுகிய இடத்தில் ஏற்படுகிறது. தினமும் ஒரே இடத்தில் இறுகலாக உள்பாவாடை கட்டுவதால் அந்த இடத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் இந்த புற்றுநோய் இடுப்புப் பகுதியில் இருக்கும் மெல்லிய நிண நீர்க்குழாய்களுக்கு பரவினால் கட்டியை அகற்ற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே சேலை புற்றுநோயைத் தவிர்க்க உள்பாவாடையை சற்று லூஸாக கட்டலாம், பட்டையான நாடாவைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.