1. Home
  2. ஆரோக்கியம்

இது உண்மையா ? ரெட் ஒயின் குடித்தால் சர்க்கரை நோய் வராதாம்..!

1

குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என சொல்வார்கள். ஆனால் ரெட் ஒயின் குடிப்பது இதயம், பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என சொல்கிறது அண்மையில் நடத்திய ஆய்வு முடிவு. ரெட் ஒயினில் உள்ள பொலிபீனோல்ஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது என மாட்ரிட்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சிக் கழகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒயின் குடிப்பதால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என்பது தொடர்பான ஆய்வுகள் பலமுறை நடத்தப்பட்டன. இதில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு மிக சிறிதளவு ஒயின் குடிப்பதால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பானது 30% வரை குறைந்துள்ளதாம்.பெண்கள் வாரத்தில் 7 முறையும், ஆண்கள் 14 முறைகளும் மிக சிறிதளவு மட்டுமே ஒய்ன் குடிப்பதால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதுவே அளவுக்கு அதிகமாக குடித்தால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதே உண்மை.

மேலும்  ரெட் ஒயினில் இருக்கும் ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. சோதனையில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபினால்களின் செயல்திறன் 47 மணி நேரம் வரை நீடித்தது. இதனால், நோய் எதிர்ப்பு திறன் ரெட் ஒயினில் அதிகம் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். எனவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வயதிற்கு தகுந்த அளவில், ரெட் ஒயினை ஓவ்வொருவரும் அருந்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முன்னதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்வெரட்ரோல் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் ரெட் ஒயினில் உள்ளதால் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை கொல்லும் திறன் உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒயின் குடிப்பதால் தோல் மிகவும் பொலிவுடன் காணப்படும் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

அப்பறம் என்னங்க... ஆண்கள் மட்டுமல்ல, பருக்களின் தொல்லையில் இருந்து விடுபட பெண்களும் மருந்து போல சில டீஸ்பூன் அளவுக்கு ரெட் ஒயின் குடிக்கலாம். போதைக்காக இல்லாமல் மருந்தாக ரெட் ஒயினை பயன்படுத்தினால் ஏராளமான பலன்களைப் பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Trending News

Latest News

You May Like