1. Home
  2. ஆரோக்கியம்

இது உண்மையா ? பார்லி தண்ணீர் குடிச்சா நிஜமாவே எடை குறையுமாம்..!

1

பார்லியில் அதிகப்படியான அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது நீண்ட நேரம் வயிறை நிரம்பிய உணர்வோடு முழுமையாக வைத்திருக்கச் செய்யும்.பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டிருப்பதால் எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான கலோரி அளவை கட்டுப்படுத்துவதோடு தேவையில்லாமல் ஜங்க் உணவுகளை தவிர்க்க உதவுகிறது. இதனால் எளிமையாக உடல் எடையைக் குறைக்கும்.

‘பார்லி ரொட்டியும், மோரும் சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் வராது’ என்பது ஒரு பார்சிய நாட்டின் பழைய பழமொழி. 100 கிராம் பார்லியில் 350 கலோரி உள்ளது. இதில் 80 சதவிகித கலோரிகள் மாவுச்சத்துதான். அதனால் இது பலமிக்க உணவாக கருதப்பட்டது. எகிப்து நாட்டில் பிரமிட் கட்டிய தொழிலாளர்களின் முக்கியமான உணவு பார்லிதான்.பார்லி தொற்று நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும், உடற்புண்களுக்கும், காயங்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தானியங்களிலுள்ள நார்ச்சத்து சமைக்கும்போது கொஞ்சம் குறையும். ஆனால், பார்லியில் உள்ள ‘பீட்டோ குளூக்கான்’ என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை, இதுதான் பார்லியின் தனிச்சிறப்பு.

பார்லியில் கலோரி அளவுகள் மிக மிகக் குறைவு. பார்லி நீரை தினமும் குடித்து வந்தால் நம்முடைய ஜீரண மண்டலம் சீராக இயங்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். ஜீரண சக்தியை முறைப்படுத்துவது எடையை குறைப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.

ஆயுர்வேதத்தில் இந்த பார்லி நீரை கிட்டதட்ட ஜீரணத்தை மேம்படுத்த உதவும் டானிக் போலவே பயன்படுத்துகிறார்கள். இந்த பார்லி நீரை எடுத்துக் கொள்வது மலச்சிக்கல், டயேரியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

பார்லி அரிசியை 10 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் இரவில் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்டிய பின் வடிகட்டி குடித்துவர சிறுநீரக பாதை அடைப்பு சரியாகி ஆரம்பகட்ட புரோஸ்டேட் பிரச்னை சரியாகும். இதை நேரடியாக குடிக்க முடியாதவர்கள் இதனுடன் சர்க்கரை பாகு அல்லது பழச்சாறு கலந்து குடிக்கலாம். இதனால் அதிக தாகம், தொண்டை வலி, தொண்டை புண், உடல் பலஹீனமான நிலை மாறும். 

பார்லியில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது. நோயெதிர்ப்பு ஆற்றலின் குறைபாட்டால் உண்டாகும் பருவ கால தொற்றுக்களான சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றின் விளைவுகளில் இருந்து தடுக்கிறது. நோயெதிர்ப்பு ஆற்றல் சரியாக இருந்தாலே உடலின் பல்வேறு இயக்கங்களும் சீராகி உடல் எடையைக் குறைப்பதற்குத் தூண்டும்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் தினமும் பார்லி வாட்டர் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பார்லி தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலமும் சுத்தமாகும். குழந்தைகள் பார்லி தண்ணீரைப் பருக அது அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கிறது.

பார்லி ஒரு ஜீரோ கலோரி ஜீரோ கொலஸ்டிரால் தானியம். அதேசமயம் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் இதில் அதிகம். அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மட்டுமின்றி கொலஸ்டிராலும் கட்டுக்குள் வரும். உயர் ரத்த அழுத்தமும் சீராகி எடையை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.

காய்ச்சல், சோம்பல், சோர்வு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் பார்லி தண்ணீரை குடித்தால், உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். வியர்வை அதிகமாக வெளியேறி, உடலில் நீர்ச்சத்து குறைந்து போனால் உடனே பார்லி தண்ணீரைக் குடிக்க வேண்டும். உடலில் சூடு அதிகரித்தால் பார்லி தண்ணீரைக் குடிப்பதால், சூடு தணிந்து சமன் செய்யும்.

அதிக எடை கொண்டவர்கள் பார்லி தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். சில வகையான புற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் பார்லி தண்ணீருக்கு உண்டு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

பார்லி தண்ணீர் தயார் செய்வது எப்படி?

பார்லி ப்ராடக்ட்டுகள் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாட்டில்களில் கிடைக்கின்றன. அதுபோன்று பதப்படுத்தப்பட்டதை பயன்படுத்துவதை விட வீட்டில் மிக எளிமையாக நாமே தயார் செய்து கொள்ளலாம். பார்லி வாட்டர் தயார் செய்வதற்கு நல்ல தரமான பார்லியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அரை கப் பார்லி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் (ஒன்றுக்கு மூன்று). இந்த நீரில் பார்லி நன்றாக சாதம் போல மென்மையாக குழையும் வரை வேகவைக்க வேண்டும்.

பார்லி நன்கு வெந்ததும் சாதம் வடிப்பது போல இந்த நீரை தனியே வடித்துக் கொள்ள வேண்டும். இதில் உப்பு மட்டும் சேர்த்து ஆறியதும் கஞ்சி போலவும் குடிக்கலாம்.

பார்லிக்கு தனித்துவமான சுவை என்று பெரிதாக எதுவும் இருக்காது. அதனால் சுவையை கூட்ட வேண்டுமென்று நினைத்தால் இதில் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, தேன், இலவங்கப்பட்டை பொடி என அவரவர் தேவைக்கும் ருசிக்கும் ஏற்றவாறு சேர்த்துக் கொண்டு குடிக்கலாம். இப்படி குடித்தால் எடை இழப்பை இன்னும் கூடுதலாக தூண்ட உதவியாக இருக்கும்.

வெறுமனே வடித்த பார்லி நீரை ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு பத்து நாட்கள் வரை கூட பயன்படுத்தலாம்.

தினமும் முறையான உடற்பயிற்சி செய்வதோடு இந்த பார்லி நீரை ஒரு கப் அளவுக்கு குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

Trending News

Latest News

You May Like