இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமா?
நம்முடைய ஆரோக்யமே பூரணமில்லாத போது ஆரோக்யமான கோழியை எதிர்பார்க்க முடி யாது என்பதுதான் உண்மை.

மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் அம்மாக்கள் மிச்சம் வைக்காமல் சமைக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மிச்சம் இருந்தால் என்ன இருக்கவே இருக்கு ஃப்ரிட்ஜ். இரண்டு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்கும். மீண்டும் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பவர்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். சமைக்காத உணவை பதப்படுத்தத்தான் ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டது.
எல்லோருடைய வீட்டிலும் பாலும், பழங்களும், காய்கறிகளும் ஒரு புறம் இடத்தை பிடித்தால் மறுபுறம் இட்லி மாவு, பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஃப்ரிட்ஜின் மறுபுறத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றது. இப்படி அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தப்படும் உணவு பொருள்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அப்படியிருக்க வாரம் முழுக்க சுத்த அசைவம் என்று பேசும் அசைவபிரியர்கள் வாரம் ஒரு முறை இறைச்சி, மீன், இறா, நண்டு என்று மொத்தத்தையும் பிடித்து வந்து ஃப்ரிட்ஜில் அடைத்துவிடுகிறார்கள்.
மேலும் ஆடு, கோழி, மீன் எதுவாக இருந்தாலும் அவை எவ்வித நோய்தாக்கலுக்கும் உள்ளாகாமல் இருந்தால் தான் புரதச்சத்து முழுமையாக கிடைக்கும். இல்லையென்றால் புரதச்சத்து சிதைந்து இருக்கும். உதாரணத்துக்கு கோழி இறைச்சி சாப்பிட்டால் புரதம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கோழி ஆரோக்கியமானதாக இருந்திருந்து இறைச்சியை வாங்கிய உடனே சமைத்து சாப்பிட்டால்தான் அதில் உள்ள புரதச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இங்கு நம்முடைய ஆரோக்யமே பூரணமில்லாத போது ஆரோக்யமான கோழியை எதிர்பார்க்க முடி யாது என்பதுதான் உண்மை.
கிடைக்கும் நேரத்தில் இறைச்சியை மொத்தமாக வாங்கி மாத அல்லது வாரக்கணக்கில் வைத்திருந்து வேண்டிய போது சமைத்தாலோ அல்லது ஏற்கனவே சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டாலோ இதில் இருக்கும் புரதம் அழிந்து விஷமாக மாறிபோகும் அபாயமுண்டு என்று எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இறைச்சியில் பாக்டீரியாவின் வேகம் அதிகமாக இருக்கும். இதுஅருகில் இருக்கும் மற்ற உணவுகளையும் பாதிக்க செய்யும். தற்போது இறைச்சியை வைக்க தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜ் உண்டு என்றாலும் நாள்பட்ட இறைச்சி உடலில் செரிமான பிரச்னைகளை உண்டாக்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் குறிப்பாக ஆடு, கோழி போன்றவற்றையாவது என்கிறார்கள் மருத்துவர்கள். ஹார்மோன் ஊசிகளால் வேகமாக வளரும் கோழிகளும், மருந்து குணமுள்ள இலை தழைகளை உண்ணாத நோஞ்சான் ஆடுகளும் உடலுக்கு எந்தவிதத்தில் பலன் தர போவதி ல்லை. மாறாக பல்வேறு பாதகங்களையே ஏற்படுத்தும்.மீன் உடலுக்கு நல்லது என்றாலும் அதையும் நாள்பட வைத்து சாப்பிடுவது நல்லதல்ல என்பதையும் அசைவப் பிரியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஃப்ரிட்ஜ்ஜில் என்னவெல்லாம் வைக்கலாம் என்று திட்டமிடுவதை விட எவ்வளவு நேரம் வைக்க வேண்டும் என்பதை நிச்சயம் இல்லத்தரசிகள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை. இறைச்சியை மொத்தமாக வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
காசையும் கொடுத்து நோயையும் வாங்குவானேன் என்பதற்கு சிறந்த உதாரணம் இதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்.
newstm.in
newstm.in