1. Home
  2. ஆரோக்கியம்

கோடை காலத்தில் முட்டை சாப்பிடுவது அவசியம் ? ஏன் தெரியுமா ?

1

வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல அவதிகளுக்கு உள்ளாக நேரலாம். உதாரணமாக, கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லது, கெட்டதா என்ற சஞ்சலம் சிலருக்கு இருக்கலாம்.

முட்டையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்திருக்கின்றன.அவ்வளவு சத்துகள் நிறைந்த முட்டையை கோடைகாலத்தில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் அது சரியில்லை

உண்மையில், கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலின் நீர்ச்சத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன.

மேலும் முட்டை உடலின் ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் உடல் சோர்வு, பலவீனத்தைத் தடுக்கிறது.

ஆனால் முட்டையின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதும் நல்லதல்ல. காரணம், கோடையில் அளவுக்கும் அதிகமாக முட்டை உட்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கோடையில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 முட்டைகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அதை விட அதிகமாக உட்கொள்வது உடலில் வெப்பத்தை அதிகரிக்கலாம். இது குடல் இயக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், முட்டை உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் முட்டைகளை சாப்பிடுவது, நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை உண்டாக்கும். இதனால் எடை குறைய உதவும். ஆனால் கோடையில் நாம் இயற்கையாகவே உணவின் மீது ஆர்வம் காட்ட மாட்டோம்.

கோடை காலத்தில் முட்டையை எந்த வடிவத்திலும் சாப்பிடலாம். ஆனால் வேக வைத்த முட்டையை விட வேறு எந்த வடிவமும் சிறந்தது அல்ல. வறுத்த முட்டைகளை விட வேகவைத்த முட்டைகள் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, நீங்கள் கோடையில் முட்டைகளை உட்கொள்ளலாம் என்றும் ஆனால் உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 1-2 முட்டைகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் சுகாதார நியுணர்கள் கூறுகின்றனர். உங்கள் உணவில் நிறைய தண்ணீர் மற்றும் பழங்களுடன் சேர்த்துதான் இந்த முட்டையை எடுக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like