1. Home
  2. ஆரோக்கியம்

காலையில் டீ காபி குடிப்பது நல்லதா ? கெட்டதா?

காலையில் டீ காபி குடிப்பது நல்லதா ? கெட்டதா?


காலையில் காபி குடிக்காவிட்டால் பலருக்கும் அன்றைய நாளே எதையோ இழந்ததை போல் இருப்பார்கள். அன்று முழுவதுமே எதிர்படுபவர்களிடம் எதற்கெடுத்தாலும் கோப பார்வை வீசுபவர்களும் இருக்கிறார்கள். காபி குடிப்பது உடல்நலனுக்கு கேடு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் அதில் உள்ள காஃபின் என்ற வேதிப் பொருள் தான் கெடுதல் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அதே காபியை பால் சேர்க்காமல் குடித்து வந்தால் பார்க்கின்சன் நோய், டைப் 2 சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், கல்லீரல் புற்றுநோய், இதய ரத்தக் குழாய் அடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறையும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காபியில் உள்ள சில ரசாயனம் உடலின் ரத்த ஓட்டத்தைத் தற்காலிகமாக அதிகரிக்கச் செய்யும். இதனால், கர்ப்பிணிகள், குழந்தைப்பேற்றுக்கு முயற்சி செய்பவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் காபி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காபியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் மூலக்கூறுகள் உடலில் உள்ள கொழுப்பை எரித்து விடுகிறது. காபின் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி புத்துணர்வை அளிக்கிறது. இதன் மூலம் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கச் செய்கிறது.

Trending News

Latest News

You May Like