முகக்கவசத்தோடு முத்தம் கொடுப்பது ஆபத்தா ?
முகக்கவசத்தோடு முத்தம் கொடுப்பது ஆபத்தா ?

முகக்கவசம் அணிந்தவாறு முத்தம் பரிமாறிக்கொள்ளும் போக்கு சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெருந்தொற்று காலத்தில் இப்படிப்பட்ட காதல் சேட்டைகளில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருமுறை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும அவருடைய கணவர் இருவரும் விமானம் ஏறும்போது முகக்கவசத்துடன் முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகளவில் பரவியது. அதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் வருண் தன்னுடைய காதலி திவ்யாவுக்கு மும்பை விமானநிலையத்தில் வைத்து மாஸ்க் அணிந்தவாறு முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படம் இந்தியளவில் நெட்டிசன்களிடையே வைரலானது.
இதை தொடர்ந்து பலரும் தங்களை காதலை வெளிப்படுத்த முகக்கவசம் அணிந்தவாறு முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது தான் விஞ்ஞான உலகத்துக்கு இதிலுள்ள ஆபத்து புரிந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், அதுவும் தடுப்பூசி கிடைக்காத சூழலில் முகக்கவசத்துடன் முத்தமிட்டுவது ஆபத்து என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எந்த தொற்றும் பரவக் கூடாது என்ற நோக்கத்தில் தான் முகக்கவசம் அணிந்திட மக்களை வலியுறுத்துகிறோம். ஆனால் அதை மறந்து காதல் வேட்கையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை உருவாக்கும் என்கிறார்கள் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள்.
அதுவும் கோவிட்-19 போன்ற நுரையீரலை தாக்கக்கூடிய வைரஸுக்கு இதுபோன்ற செயல்பாடு இன்னும் ஊக்கம் கொடுப்பதாக அமைந்துவிடும். மாஸ்க் என்பது ஆணுறையை போன்றது தான். முறையாக அதை அணிந்திருந்தால் ஆபத்து ஏற்படுவது குறைவு. ஆனால் அதில் தவறேதும் இருந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமானதாகவே இருக்கும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.