மாத்திரைகளின்றி  பக்கவிளைவுகள்  இன்றி காய்ச்சலை விரட்டும் கஷாயம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத அதே நேரம் குடித்த சிறிது நேரத்தில் சளி, இருமல், காய்ச்சல் அனைத்தையும் கட்டுப்படுத்தி விடும்.

மாத்திரைகளின்றி  பக்கவிளைவுகள்  இன்றி காய்ச்சலை விரட்டும் கஷாயம்
X

தடுக்கி விழுந்தாலும் தலைச்சிறந்த மருத்துவர்களை நாடிச்செல்லும் இக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் எல்லாமே மிகப்பெரிய நோயாக இருக்குமோ என்று அச்சத்தில் இருப்பவர்களும் உண்டு. நொடிக்கு நூறு நோய் பிறக்கும் வேளையில் இத்தகைய அச்சங்கள் இயல்பாகவே மனதிற்குள் குடிகொண்டு விடுகின்றன.

மறு ஜென்மம் எனப்படும் பிரசவக் காலங்களையும் வீட்டிலேயே நல்ல முறையில் பார்த்தார்கள் நமது முன்னோர்கள். வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று பாதிப்புகளால் தான் உடலில் நோய்கள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து நோயை அறிந்து வாதம், பித்தம், கபத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் அறிந்து சிகிச்சை செய்தவர்கள் நமது முன்னோர்கள். கடுமையான நோய்களையே விரட்டியவர்கள் சாதாரண இருமல், காய்ச்சலுக்கு ஒரு கஷாயம் மூலமே தீர்வு கண்டுவிடுவார்கள். இன்றும் பாட்டிகளின் ஆதிக்கங்கள் இருக்கும் வீடுக ளில் கஷாயம் தான் காய்ச்சலை போக்கும் மருந்தாக செயல்படுகின்றன.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு எளிய முறையில் இந்தக் கஷாயத்தைச் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத அதே நேரம் குடித்த சிறிது நேரத்தில் சளி, இருமல், காய்ச்சல் அனைத்தையும் கட்டுப்படுத்திவிடும்.

கஷாயம்: 2 பேருக்கான அளவில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவை:

இஞ்சி - பெரிய துண்டு அல்லது சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சித்துண்டுகள் - அரைகப், உலர் திராட்சை -10 எண்ணிக்கை, ஏலக்காய் -3, மிளகு -4, நாட்டுச் சர்க்கரை அல்லது சுத்தமான தேன்.

செய்முறை:

சுத்தம் செய்த இஞ்சி, ஏலக்காய், திராட்சை, மிளகு அனைத்தையும் அம்மி அல்லது மிக்ஸியில் இட்டு மைய அரைக்கவும். அகலம் குறைந்த பாத்திரத்தில் 4 தம்ளர் நீர்விட்டு கொதித்ததும் மிக்ஸியில் அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு தம்ளராக ஆகும் வரை மீண்டும் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.

தொண்டையில் சளி, இருமல் கட்டு இருந்தால் இளகி மலம் வழியாக வெளியேறிவிடும். தொண்டைக்கு இதமாக இருக்கும். சூடாக பொறுக்கும் பதத்தில் குடித்தால் உடலிலுள்ள வெப்பம் வியர்வை வழியாக வெளியேறி உடல் சூட்டைக் குறைக்கும். காலை, மாலை இருவேளை என மூன்று நாட்கள் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பக்கவிளைவுகள் தரும் மாத்திரைகளை விட பத்தியமில்லா கஷாயம் சிறந்தது.

newstm.in

newstm.in

Next Story
Share it