ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்

ஒரு மாதம் வரை இரத்தப்போக்கு உண்டாகி மீண்டும் மூன்று மாதம் இடைவெளி விட்டு அடுத்து ஒரு மாதம் இரத்தப்போக்கால் அவதிப்படும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்
X

இன்று பருவ வயதை எட்டிய பெண்கள் படும் பிரச்னைகளில் முக்கியமானது கவனிக்க வேண்டியது ஒழுங்கற்ற மாதவிடாய் தான். மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலி, இடுப்பு வலி, அவஸ்தை, மன ரீதியாக படும் எரிச்சல் போன்ற காரணங்களால் இளம்பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையால் பாதிக்கப்பட்டாலும் அலட்டிக்கொள்ளாமல் மாறாக ஒரு வித நிம்மதியடைகிறார்கள். ஆனால் இதை கவனிக்கா விட் டால் பின்னாளில் தாய்மை அடைவதில் சிக்கல் உண்டாகும் என்கிறார்கள் மகப்பேறு நிபுணர்கள்.

மாதவிடாய் சுழற்சி:
பூப்படைந்த பெண்களின் உடலில் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடுத்த 14 நாட்கள் புரொஜெஸ்ட்ரான் சுரப்பியும் சுரக்கும். இதற்கு பிறகு 28 நாட்களில் மாதவிடாய் உண்டாகும். இதுதான் சீரான மாதவிடாய் சுழற்சி என்பது. பொதுவாக மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாள்களுக்குள் நடைபெற்றால் பிரச்னையில்லை. ஆனால் அதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ எப்போதும் வருகிறது என்றால் அது நிச்சயம் கவனிக்கத் தக்கதே.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி:
மாதவிடாய் நாள்களில் இரத்தப்போக்கும் கவனிக்க தக்கதே. ஐந்து நாள்கள் வரை அதிக அளவில் இல்லாமல் இரத்தப்போக்கு நீடிக்க வேண்டும். அதே போன்று நாள் ஒன்றுக்கு 3 நாப்கின்கள் வரை பயன்படுத்தினால் அது சீரான மாதவிடாய். ஆனால் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்குடன் நாள் ஒன்றுக்கு 5 க்கும் மேற்பட்ட அதிகமான நாப்கின்கள் நனைத்து மாற்றுவதும், ஐந்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இரத்தப்போக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையையே குறிக்கும்.

அதேபோன்று நாள் ஒன்றுக்கு 1 நாப்கின் மட்டுமே மாற்றுமளவுக்கு இரத்தப்போக்கே இல்லாமல் இருப்பதும் மாதவிடாய் பிரச்னையே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் சிலருக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் உண்டாகும். மாதக்கணக்குகள் இன்னும் கூட அதிக மாகலாம். வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே மாதவிலக்கு உண்டாகும் பெண்களும் உண்டு. அதே போன்று ஒரு மாதம் வரை இரத்தப்போக்கு உண்டாகி மீண்டும் மூன்று மாதம் இடைவெளி விட்டு அடுத்து ஒரு மாதம் இரத்தப்போக்கால் அவதிப்படும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவது சகஜம் என்றாலும் மெனோபாஸ்க்குரிய வயது 55 லிருந்து தற் போது 35 வயதுக்கு பிறகே சிலருக்கு வருவதும் கவலையளிப்பதாக இருக்கிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்

ஒழுங்கற்ற மாதவிடாயால் உண்டாகும் ஆபத்துகள்:
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணம் அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகள் தான். ஹார்மோன் சமநிலையின்றி இருக்கும் போது கருமுட்டையில் பாதிப்பை உண்டாக்கும். இதை கவனியாவிட்டால் திருமணத்துக்குப் பிறகு கருத்தரித்தலில் பிரச்னை உண்டாகும்.பூப்படைந்த பிறகு ஆரம்ப காலத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவது இயல்பு என்றாலும் தொடர்ந்து இந்தப் பிரச்னை இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை நாடுதல் நல்லது.

ஹைப்போதைராய்டு பிரச்னை இருக்கும் இளம்பெண்களுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை உண்டாகிறது. இதன் பாதிப்பு மேலும் தீவிர மாகி உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கலையும் உண்டாக்கிவிடும் என்பதால் தைராய்டு பிரச்னையை ஆரம்பத்திலேயே குறிப்பாக பருவ வயது பெண்கள் கவனிப்பது நல்லது என்கிறார்கள் மகப்பேறு நிபுணர்கள்.

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்னதான் காரணம் தொடர்ந்து பார்க்கலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it