1. Home
  2. ஆரோக்கியம்

தர்ப்பூசணி பழத்தின் மேலே கருப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்பட்டால்...

1

தர்ப்பூசணி:
தகிக்கும் அனலில் தர்ப்பூசணி சாப்பிடாவிட்டால் கோடையைக் கடப்பது எப்படி? வெட்டிவைத்த தர்ப்பூசணியின் ஈர்ப்பே அதன் சிவப்பு நிறம்தான். அதை கச்சிதமாக கால்குலேட் செய்த வியாபாரிகளின் கைவண்ணம்தான் செயற்கை சாயங்கள். எரித்ரோசின் பி, ரெட் 3 ஆகிய கெமிக்கல்ஸ்தான் தர்ப்பூசணியின் செக்கச்செவேல் நிறத்திற்கு ஆதாரம். எரித்ரோசின் பி-யில் உள்ள அயோடின், சோடியம் ஆகியவை உடலில் தைராய்டு தொடர்பான நோய்களைத் தூண்டுகின்றன.

கார்பைடு, லெட் குரோமேட், மெத்தனால் யெல்லோ, சூடான் ரெட் ஆகிய வேதிப்பொருட்களை தர்ப்பூசணிப்பழத்தின் ராக்கெட் வேக வளர்ச்சிக்காகவும், தேன்சுவை இனிப்பிற்காகவும் அள்ளிக்கொட்டுகின்றனர். லெட் குரோமேட்டினால் தோல் அலர்ஜி, நரம்பு மண்டலம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படுவதோடு, சூடான் ரெட் என்ற செயற்கை சாயத்தால் புற்று நோயும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எப்படிக் கண்டறிவது?
தர்ப்பூசணி பழத்தின் மேலே கருப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்பட்டால் சந்தேகமே வேண்டாம், அவை கண்டிப்பாக வேதிப்பொருட்களின் விளைச்சலேதான்.

வாழைப்பழம்:
அனைத்து சீசன்களிலும் கிடைக்கும், பர்ஸை கடிக்காத பழம். வாழைப்பழங்களை அவை பழுக்க ஒரு மாதம் இருக்கும்போது அசிட்டிலின் வாயு நிரம்பிய அறையில் போட்டு பழுக்க வைக்கிறார்கள். வேதிக்கலவையில் முக்கி எடுக்கப்பட்ட வாழைப்பழங்கள் பின்னர் வேதிவாயு நிரம்பிய அறையில் பழுக்க வைக்கப்படுகின்றன.

என்ன செய்யலாம்?
தோலை முழுவதுமாக நீக்கியபின் வாழைப்பழத்தை சாப்பிடுவது பக்கவிளைவுகளின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆப்பிள்:
இப்போது தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் நிச்சயம் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டி வரும். காரணம், மெருகு குறையாது மினுமினுக்கும் மெழுகுதான். அங்காடிகளிலுள்ள ஆப்பிள்கள், செழுமை இழக்காமலிருப்பது அதில் பூசப்பட்டுள்ள மெழுகுப்பூச்சினால்தான். பலரும் அப்படியே கடித்துத் தின்னும் ஆப்பிள், ஷெல்பில் ஏற்றப்பட்டு ஓர் ஆண்டு கூட ஆகியிருக்கலாம் என உணவு வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

என்ன செய்யலாம்?:
வினிகரில் ஆப்பிள் பழங்களை நன்கு கழுவி, தோலை உரித்துவிட்டு சாப்பிடலாம்.

திராட்சை:
உங்களுக்கு எப்போதாவது பழங்களை சாப்பிட்டுவிட்டு குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்திருக்கிறீர்களா? ‘ஆமாங்க ஆமாம்’ என்றால் நீங்கள் சாப்பிட்ட பழங்களிலுள்ளது பென்ஸைன் ஹெக்ஸாகுளோரைடு (BHCl) என்பது உறுதி. பழங்களை நீங்கள் உருட்டி புரட்டி தண்ணீரில் கழுவினாலும் பிஹெச்சிஎல் சிறிதும் பழங்களிலிருந்து நீங்காமல், தசைவலி மற்றும் குமட்டலை உடலில் ஏற்படுத்துகிறது. கல்லீரலை கபளீ
கரம் செய்யும் இந்த பிஹெச்சிஎல் பெருமளவு திராட்சைகளை பழுக்க வைக்கும் செயல்முறையில் பயன்படுகிறது.

என்ன செய்யலாம்?:
உப்பு, பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து அதில் திராட்சைகளைக் கழுவிச் சாப்பிடலாம்.
 

Trending News

Latest News

You May Like