இதை தெரிஞ்சா இனிமேல் நீங்கள் முட்டை ஓட்டை தூக்கி போட மாட்டீங்க..!
ஆய்வுகளின்படி, முட்டையின் வெளிப்புற உறையில் கால்சியம் கார்பனேட், புரதங்கள் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. ஒவ்வொரு முட்டை ஓட்டிலும் தோராயமாக 40 சதவீதம் கால்சியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஒவ்வொரு கிராமிலும் 381-401 மி.கி கால்சியம் உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டையை உண்பதற்கான சிறந்த வழி, முதலில் முட்டையை வேகவைத்து, முட்டை உரித்து விட்டு ஓட்டை உடைத்து, பின்னர் அதை உட்கொள்வதற்கு முன் பொடியாக அரைத்து சாப்பிடுவதாகும். இதை உணவுடன் உட்கொள்ளலாம் அல்லது சாறு அல்லது தண்ணீருடன் உட்கொள்ளலாம். உங்கள் உணவில் சேர்க்கும் முன் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.
முட்டை ஓடுகளை மட்டும் தனியாக உடைத்து எடுத்துக்கொள்ளவும். ஈரம் நீங்க காய வைத்து பின்னர் மிக்ஸியில் மைய அரைத்து பவுடராக்கி பாலில் கலந்தோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம். இந்த முட்டை ஓடு பவுடரை நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைக்கக் கூடாது. முட்டை ஓடு மட்டுமல்ல..பொதுவாகவே ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால் ஆரோக்கியமற்றதாக மாறி ஃபுட் பாய்சனாக மாறும். எனவே மூன்று நாட்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பவுடரை சேமித்து வைக்கலாம். முடிந்தால் தினமும் தேவைக்கு மட்டும் பவுடராக்கி கலந்து குடிப்பது நல்லது. இல்லையெனில் உறைந்த நிலையில் வேண்டுமானால் இரு வாரத்திற்கு வைக்கலாம்.பால் அலர்ஜி இருப்போருக்கு கால்சியம் தட்டுப்பாடு இருக்கலாம். அவர்கள் 2 ஸ்பூன் முட்டை ஓடு பவுடரை ஏதாவதொரு வழியில் உட்கொள்ளலாம்.
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளிலும் கால்சியம் சத்து இருக்கும். எனவே அதற்கு ஏற்ப இந்த முட்டை ஓடு பவுடரை உட்கொள்ள வேண்டும். அதேபோல் உணவில் போதுமான கால்சியம் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அரை ஸ்பூன் முட்டை ஓடுப் பவுடரை பாலில் கலந்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் போதுமானது.
சிலருக்கு ஷெல் அதாவது ஓடு அலர்ஜி இருக்கலாம். குழந்தைகளுக்கு முட்டை ஓடு கலந்து கொஞ்சமாக கொடுத்துப் பாருங்கள். தோலில் அரிப்பு, அலர்ஜி என எதுவும் தென்படவில்லை எனில் கொடுக்கலாம். இதேபோல் பெரியவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தாராளமாக சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.
முட்டையின் ஓடு சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தினை பெற உதவுகிறது. முட்டையின் ஓடினை பொடி செய்து அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து முகத்தில் போட முகம் பளிச்சென்று இருக்கும்.
அதேபோல் முட்டை ஓட்டின் உள்ளே இருக்கும் சவ்வுத் தோலைக் கூட கொடுக்கலாம். அதிலும் அதிக அளவிலான கால்சியம் சத்து நிறைந்தது. அதை மூன்று நிமிடங்கள் வேக வைத்து உரித்து சேகரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஒரு முட்டையின் சவ்வு போதுமானதாக இருக்காது. ஐந்து ஆறு முட்டைக்கு மேல் உள்ள சவ்வுகளை சேகரித்து சாப்பிட்டால்தான் கால்சியம் சத்து கிடைக்கும்.
2 டீஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் மற்றும் கடலை மாவு சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம்.
வயதாவதினால் ஏற்படும் முகச் சுருக்கத்தை இது போக்கிவிடும். 3 முதல் 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழவி விடலாம். முகத்தில் விழும் கோடு போன்றவற்றை தடுப்பதற்கு இது சிறந்த வழியாகும்.
2 முதல் 4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் சேர்த்து கலந்து அதை கண்களைச் சுற்றி உள்ள சருமப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் இரவு தூங்கும் முன்பு மறக்காமல் செய்து வாருங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் இருக்கும்.
வெயிலினால் ஏற்படக் கூடிய சரும எரிச்சல் போன்றவற்றை முட்டையின் ஓடு பயன்படுத்துவதால் சரி செய்து விடலாம். ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஓற விட வேண்டும். பின்னர் அந்தக் கலவையை சருமத்தில் தடவி வந்தால் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகி விடும்.
முட்டை ஓட்டினை மிக்ஸியில் சுற்றி நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். தினமும் பல் விளக்கியவுடன், இதனைக் கொண்டு பற்களில் தேயுங்கள். முட்டை ஓட்டில் கால்சியம் பொடாசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை பற்களுக்கு பலம் தருகிறது. எனாமலை இறுகச் செய்கிறது. பற்களின் சிதைவை தடுக்கிறது.
கற்றாழை ஜெல்லுடன் முட்டை ஓடு பொடியை சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஓற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.