முளை கீரையை குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால்...

நமது அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டுமானால் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். புதினாக் கீரை மற்றும் அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.
1.முளை கீரையை குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் 41ம் நாளில் நன்கு உயரமாக வளர்ந்து விடுவர் ..சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது
2.சிலர் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றநோயால் அவஸ்த்தை படுவர் .அவர்கள் முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் சரியாகும்.
3.முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. சிலர் குடல் புண் வந்து அவஸ்த்தை படுவர் .அப்போது முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அந்த அல்சர் குணமாகும்
4.சிலர் முகப்பரு, தேமல் போன்ற ஸ்கின் பிரச்சினையால் அவஸ்த்தை படுவர் அவர்கள் முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், அவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.