1. Home
  2. ஆரோக்கியம்

இந்த கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலே கண்கள் தொடர்பான கோளாறுகள் நீங்கும்..!

1

பொன்னாங்கண்ணி ஒருவாய் காயகல்ப மூலிகை. இதனை தினமும் சமைத்து சாப்பிட்டால் உடல் உறுதியாகும். நோய் அகலும். ஆரோக்கியம் பெருகும்.
கண்ணுக்கு ஒளியையும்,அழகையும் தந்து கண் பார்வையை தெளிவாக்கும் சக்தி பொன்னாங்கண்ணிக்கு இருக்கிறது. இதனை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பகலிலேயே வானத்தில் நட்சத்திரங்களை காணலாம் என்ற சொல் வழக்கு உண்டு. பார்வை துல்லியமாகும் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

இந்த கீரையில் பார்வையை தெளிவாக்கும் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம், இரும்பு, தாது சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிராது. கூந்தல் தைலங்களில் பொன்னாங்கண்ணி முக்கிய மூலிகையாக சேர்க்கப்படுகிறது.

கண்எரிச்சல் ஏற்பட்டாலோ, கோடை காலங்களில் கண்கள் சிவந்தாலோ இந்த கீரையை அரைத்து ஒரு மெல்லிய துணியில் கட்டி கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.

பொன்னாங்கண்ணி கீரையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து, சிறிதளவு நெய்யும் கலந்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் தசைப்பிடிப்புடன் தேறும். ஒல்லியாக இருக்கும் பெண்கள் இந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும்.

மூலசூட்டை நீக்கும் தன்மை இக்கீரைக்கு உள்ளதால், மலச்சிக்கல் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து தலைக்கு குளித்தால் பிதநோய்கள் மற்றும் கண்நோய்கள் நீங்க வாய்ப்பிருக்கிறது.

தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தாலோ, அல்லது தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானாலோ, இந்த கீரையை உபயோகிப்பார்கள்.. இந்த கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதம் வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.. பிறகு அதை வடிகட்டி எடுத்துவைத்து கொண்டு, தலையில் தேய்த்து குளித்து வந்தாலே போதும், தலைமுடி உதிர்வது உடனடியாக நிற்கும்.. உடல் சூடு தணியும்.. கண்களிலுள்ள புகைச்சல் தணியும்.

இந்த கீரை, கண்களுக்கு அதிக பயன்களை தருகிறது.. இந்த கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலே, கண்கள் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.அதேபோல, இந்த கீரையை நெய்யில் வறுத்து வெள்ளை துணியில் வைத்து கண்களில் வைத்து கட்டினால், கண் பார்வை தெளிவுபெறும்.. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளித்தால், கண்கள் பொலிவுபெறும்..

அதேபோல, கண் கோளாறுகளை நீக்குவதற்கென்றே, பிரத்யேகமாக கீரை மசியல் செய்து சாப்பிடலாம்.. ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய கீரையை போட்டு வதக்கி சாப்பிட வேண்டும். முக்கியமாக 27 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே, கண் பார்வை தெளிவு பெறும். கண் இமை வீக்கம் குணமாகும்... விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி பிரச்சனைகள் நீங்கும்.

மாலை கண் நோய்க்கு, இதே கீரையை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் தீர்வு கிடைக்கும். எந்தவகையிலாவது, இந்த கீரையை உணவில் சேர்த்து கொண்டால், பகலில் கூட நட்சத்திரங்களை பார்க்கலாம் என்பார்கள்..

Trending News

Latest News

You May Like