நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால்...

நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.
நல்ல தரமான பேரீச்சம் பழங்களை (கொட்டையில்லாமல்) கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும் (தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்). பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது, பேரீச்சம் பழமாகும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
கண்பார்வை குறைபாட்டை குனபடுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது , மாலைகண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்குதேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.
எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்,
இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.
பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.முதியோருக்குப் பேரீச்சம் பழம் மிகச் சிறந்த பழமாகும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குணமாகும். பேரீச்சம் பழத்தைப் பாலில் வேகவைத்து, பருகி வந்தால் இதய நோய்கள் உங்களுக்கு வரவே வராது. இரவில் பேரீச்சங்காய்கள் மூன்றை நீரில் ஊறப் போட்டுக் காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காய்களைச் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை அறுத்து வெளியில் எடுத்து விடும்.
தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம்_பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும். தோல்பகுதிகள் வழுவழுப்பாகவும் , மிருதுவாகவும் இருக்கும்