1. Home
  2. ஆரோக்கியம்

இந்த அறிகுறி இருந்தா சிறுநீரகத்தில் கல் இருக்குன்னு அர்த்தமாம்..

இந்த அறிகுறி இருந்தா சிறுநீரகத்தில் கல் இருக்குன்னு அர்த்தமாம்..

வீட்டை சுத்தம் செய்ற மாதிரி நம்ம உடம்பை சுத்தம் செய்றது சிறுநீரக உறுப்பு தான். உடம்பில் ஒரு மூலையில் சிறிய இடத்தில் இருந்தாலும் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரோடு வெளியேற்றிவிடும். ஆனால் நச்சு உடலில் வெளியேறாமல் தங்கி இருக்கும் போது அவை கடினமான கற்களாக மாறிவிடுகிறது. இன்று பலரும் சிறுநீரக கற்களால் அவதிபட்டாலும் ஆரம்பத்தில் அறிகுறியை கண்டு சிகிச்சை எடுத்தால் கல் பெரியதாகாது அறுவை சிகிச்சை வரை போக வேண்டிய அவசியமும் இருக்காது.

அடி வயிறு வலி
தாங்கமுடியாத அளவுக்கு அடிவயிறு வலிக்கும். பெண்கள் கர்ப்பப்பை வலி என்று நினைத்துவிடுவார்கள். வலியானது முதுகின் கீழ்புறத்திலிருந்து பரவும். பிறகு பக்கவாட்டில் அடிவயிறு வரை வந்து வலியை உண்டாக்கும். பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்று என்பதால் இது தொடர்ந்து வருகிறதா என்பதை கவனிப்பது நல்லது.

சிறுநீர் பிரியும் போது
சிறுநீர் கழிக்கும் போது அதிகமாக நுரைத்து வெளியேறும். சிறுநீர் அடிக்கடி வருவது போன்ற உணர்வு இருக்கும்; சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறும். சிறுநீர் ஒருவித வாடையுடன் இருக்கும். நிறமும் அடர்த்தியாக, பழுப்பு நிறமாக, அடர்ந்த சிவப்பிலும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான எரிச்சல், அவஸ்தை உண்டாகும்.வெகு சிலருக்கு சிறுநீரில் இரத்தகசிவு உண்டாகும்.

ஒவ்வாமையும் குமட்டலும்
எப்போதும் ஒருவித ஒவ்வாமையும் குமட்டலும் இருந்துகொண்டே இருக்கும். வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும்.காய்ச்சலோடு குளிரும் அதிகமாக இருக்கும். காய்ச்சல், குளிர், குமட்டல் அதிகப்படியாக இருந்தால் கற்கள் தீவிரமாக இருக்கிறது என்பதை அறியலாம்.

சருமத்தில் தடிப்பு:
சிலருக்கு தோலில் வீக்கம்,தடிப்பு, வெடிப்பு போன்றவை தோன்றும். சிறுநீரகத்தின் கழிவுகள் உ டலில் தங்குவதால் இத்தகைய பிரச்சனைகள் தோன்றும். இவை கற்கள் நீண்ட நாள் தங்கியிருக்கும் போது உண்டாக்ககூடியவை என்று சொல்லலாம்.

சோர்வு
பொதுவான அறிகுறி என்று சொல்லமுடியாது என்றாலும் சிலருக்கு உடல் சோர்வும் அசதியும் உண்டாகும். சிறுநீரகத்தில் சுரக்கும் எரித்ரோபொய்டின் என்னும் சுரப்பு குறையும். ஆக்ஸிஜன் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களை கொண்டு செல்ல உதவும் இந்த ஹார்மோன் குறையும் போது உடலில் சோர்வு உண்டாகிறது.

இப்படியான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக காண்பிக்கும். அதே நேரம் இந்த அறிகுறிகள் எல்லாமே சிறுநீரகத்தில் கற்கள் என்பதை பரிசோதனையின்றி உறுதியாக சொல்லவும் முடியாது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகினால் கற்கள் சிறியதாக இருந்தால் அதை எளிதாக அறுவை சிகிச்சையின்றி வெளியேற்ற முடியும்.


newstm.in

Trending News

Latest News

You May Like