குழந்தைகளுக்கு நீர்கோத்திருந்தால் பசலைக் கீரையைச் சாறு பிழிந்து...

கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும்.
இதன் இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும். நீர் தாகத்தைத் தணிக்கும்.
மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும்.
குழந்தைகளுக்கு நீர்கோத்திருந்தால், பசலைக் கீரையைச் சாறு பிழிந்து அதில் கற்கண்டு கலந்து ஒரு வேளை ஒரு ஸ்பூன் வீதம் ஓரிரு நாட்கள் குடிக்கத் தந்தால் போதும். குணம் கிட்டும்.
கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான்.
இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும்.
மலச்சிக்கல், தொப்பை பிரச்சனை போன்றவற்றிற்கு இந்த கீரை நல்ல நிவாரணியாக காணப்படுகிறது.
பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது.
வெள்ளை பசலைக் கீரையை நம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் மூத்திரத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்கின்றது.
இந்தக் கீரையை நாம் அதிக அளவில் உணவில் பயன்படுத்துவதால், ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவையும் மிக விரைவில் குணமாகின்றது.
பாசிப்பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் வெள்ளை வெட்டை நோய்கள் சரியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கொடிப் பசலையை சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கின்றது.
கொடி பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
நல்ல தூக்கமும் வரும்.கொடி பசலைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து ஊலர்த்திப் பொடியாக்கி , பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கொடி பசலைக் கீரைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.கொடி பசலைக் கீரையுடன் விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை கரையும்.கொடி பசலைக் கீரை,
கொத்தமல்லி விதை , சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
கொடி பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தீராத தாகமும் தீரும்.கொடி பசலைக் கீரையை உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் , உடல் சூடு , வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.