உடலில் நீர்ச்சத்து குறைந்தால்...இந்த ஜூஸ் குடிங்க..!
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். உடலில் நீர்ச்சத்தை வேகமாக அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பழங்கள். பழங்கள் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை மிக வேகமாக அதிகரிக்கும் குணம் கொண்டது.
அதிலும் நீர்ச்சத்தை மிக வேகமாக அதிகரிக்க கூடிய பழங்களில் ஒன்று சாத்துக்குடி பழம். அதிக அளவு நீர் சத்து மட்டும் இல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் இந்த சாத்துக்குடி பழம் தன்னகத்தே வைத்துள்ளது. சாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச் சத்து ஆகியவை காணப்படுகிறது.
சாத்துக்குடியை பழமாகவோ, ஜூஸாகவோ எப்படி எடுத்துக் கொண்டாலும் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்குத் தரும். சாத்துக்குடி எல்லா கால கட்டத்திலும் நமக்கு கடைகளில் வாங்க கிடைக்கிறது. உடலில் இருக்கும் சோர்வை நீக்கி உடலை தெம்பாக புத்துணர்ச்சியாக வைத்திருப்பதில் சாத்துக்குடி முக்கிய பங்கு வகிக்கிறது.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட உகந்த பழம் இது. நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஒரு சாத்துக்குடி பழ ஜூஸ் குடித்தால் போதும். உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய சோர்வுகள் எல்லாம் நீங்கி புது தெம்பு பிறந்து உற்சாகமாக காணப்படுவீர்கள்.
சாத்துக்குடியை சாப்பிடும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை உயர்கிறது. உடல் மெலிந்து நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு தொடர்ந்து சாத்துக்குடி ஜூசை குடிக்க கொடுத்து வரும்பொழுது அவர்களுடைய உடல் நலம் தேறி மிகவும் தெம்பாக மாறிவிடுவார்கள்.
உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருபவர்கள் தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸை குடித்து வரும் பொழுது அவர்களுடைய உடல் எடையானது குறைந்து மிக அழகான தோற்றத்தை பெறுவார்கள். நீர்க்கடுப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து குடித்து வரும்போது அவர்களுடைய நீர்கடுப்பு பிரச்சனைகள் எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். சிலருக்கு உடல் சூடு அதிகரித்து பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இப்படி உடல் சூட்டால் பல்வேறு பிரச்சனையை சந்திப்பவர்கள் தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸை குடித்து வரும் பொழுது அவர்களுடைய உடல் சூடு குறைந்து உடலில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை தற்போது பலருக்கும் அதிகம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்படி மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து குடித்து வரும்போது அவர்களுடைய மலச்சிக்கல் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மலம் நன்றாக வெளியேறி உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.