குழந்தைகளை தூங்க வைக்கும் ஐடியா ..!!!
குழந்தைகளை தூங்க வைக்கும் ஐடியா ..!!!

பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போய்விடுகிறது.ஏனென்றால் பிறந்த குழந்தையானது புது உலகை பார்ப்பதால் அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது பிறந்த பின்னர் கிடைக்கவில்லை அதனால் அது அழுக ஆரம்பிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு போதிய தூக்கமின்மை காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் தூங்காமல் அழுக ஆரம்பிக்கின்றது. அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருப்பதால் குழந்தைகளுக்கு இரவில் படுக்க வைக்க சில வழிகள் இருக்கின்றது. அந்த வழிகள் கடைபிடித்தால் கண்டிப்பாக குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைக்கலாம்.சரி இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகள் பார்ப்போம்.
குழந்தையை தினமும் ஒரே நேரத்தில் படுக்க வைத்த ஆரம்பிப்பதன் மூலம் அவர்களின் உயிரியல் கடிகாரமானது நாளடைவில் அதற்கு ஏற்றது போல் மாறிக் கொள்ளும்.இப்படி ஒரு வாரத்திற்கு மேல் சிறிது கஷ்டப்பட்டு பின்பற்றி வந்தால் குழந்தைகள் தானாகவே அந்த நேரத்தில் தூங்கி விடுவார்கள்.
குழந்தைகள் தூங்கும்போது சுற்றுச்சூழல் ஆனது மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் விரைவில் தூங்கி விடுவார்கள்.ஒவ்வொரு குழந்தையும் தூங்கும் போது அவர்களுக்கு சுகமாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும் அப்போதுதான் அவர்கள் அசந்து தூங்குவார்கள்.அவர்களின் கை மடங்கி இருந்தால் அதை எடுத்துவிட முயற்சிக்க வேண்டாம் இதனால் அவர்களின் தூக்கம் களைந்து பின் அழ தொடங்கி விடுவர்.
இரவில் குழந்தை அழாமல் தூங்க வைக்க தாய்ப்பால் கொடுங்கள். மேலும் மருத்துவர்கள் கூட இரவில் தாய்ப்பால் அதிகம் கொடுங்கள் என்று தான் கூறுவார்கள்.பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையை பகல் நேரத்தில் தூங்காமல் இருந்தால் அவர்கள் சோர்வடைந்து இரவில் தூங்கி விடுவார்கள் என்று கூறுவார்கள்.
ஆனால் உண்மையில் குழந்தைகள் எப்போதுமே மிக சுறுசுறுப்புடன் இருப்பார்கள் ஆகவே இப்போது அவர்களை தூங்க வைத்தாலும் இரவில் அவர்கள் தூங்க மாட்டார்கள் ஆகவே அவர்கள் போக்கில் அவர்களை விடுங்கள்.குழந்தைகளை இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால் அவர்கள் உடல் சோர்வடைந்து விடும் இதனால் அவர்கள் இரவில் நன்றாக தூங்குங்கள்.குழந்தையை மென்மையான படுக்கை விரிப்பில் படுக்க வைத்து அவர்களைச் சுற்றி மென்மையான தலையணையை வைத்து படுக்க வைத்தால் அவர்கள் நன்றாக தூங்கி எழுவார்கள்.