1. Home
  2. ஆரோக்கியம்

இவ்வளவு நாள் தெரியாம போச்சே..! இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதா இந்த பலாபழம்..!

1

பலாப்பழம் முதன்முதலில் இந்தியாவின் மழைக்காடுகளில் தோன்றிய நிலையில் தற்போது தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் விவசாயிகள் அதை வளர்க்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் தான் பலாப்பழம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக தொடங்கியது. ஒரு கப் வெட்டப்பட்ட பச்சை பலாப்பழத்தில் 157 கலோரிகள், 2 கிராம் கொழுப்பு, 38 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 3 கிராம் புரதம், 40 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

பலாப்பழத்தில் ஃபோலேட், நியாசின், ரிபோஃப்ளேவின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. பலாப்பழத்திற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கும் நிறமிகளான கரோட்டினாய்டுகள், வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

இந்த கரோட்டினாய்டுகள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. உடல் சரியாக இயங்க உதவுகிறது. அவை புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நோய்களையும், கண்புரை கண் சம்பந்தமான பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.

பலாப்பழம் பழுக்க ஆரம்பிக்கும்பொழுது ​​அதன் கரோட்டினாய்டு அளவு கூடும். பலாப்பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உடலில் உள்ள செல் சேதத்தை தடுக்க உதவும்.

பலாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது. இது நீண்ட நேரம் நீங்கள் சாப்பிட்ட உணர்வை தரும். அதுமட்டுமல்லாமல் உங்கள் உடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கும் தன்மை கொண்டது.

பலாப்பழத்தில் இருக்கக்கூடிய இயற்கை ரசாயனங்கள் உங்கள் வயிற்றில் அல்சர் போன்ற புண்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. நம்முடைய உடல் மற்ற உணவுகளை விட பலாப்பழத்தை மெதுவாக ஜீரணித்து உறிஞ்சிக் கொள்கிறது.

அதாவது மற்ற பழங்களை நீங்கள் சாப்பிடும் பொழுது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு உயர்வதை போல பலாப் பழத்தை சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராது. பலாப்பழம் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பலாப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் உங்களுடைய இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தடுக்க உதவுகிறது.

பலா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுகிறது. இது உங்களுடைய சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. உங்கள் சருமத்தை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழம் பழுத்தவுடன் அது பழுப்பு நிறமாக மாறி விரைவில் கெட்டுவிடும். பலாப்பழத்தை கெட்டுப்போகாமல் புத்துணர்ச்சியாக வைத்திருக்க குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

Trending News

Latest News

You May Like