பாலியல் மீதான புரிதல்- குழந்தைகளுக்கு எப்படி சொல்லி தரலாம்..!

பாலியல் மீதான புரிதல்- குழந்தைகளுக்கு எப்படி சொல்லி தரலாம்..!

பாலியல் மீதான புரிதல்- குழந்தைகளுக்கு எப்படி சொல்லி தரலாம்..!
X

தற்போதைய காலங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சிறு வயது குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களிடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உங்களுடைய குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். நீங்கள் பாலியல் குறித்த புரிதலை குழந்தைகளிடம் தெரிவிக்கும் போது நீங்கள் சொல்வதை அவர்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

குழந்தைகள் வளரும் போதே பாலியல் குறித்த உரையாடலை துவங்குவது சிறந்த உத்தியாகும். இதனால் அவர்கள் வளர்ந்து இளைய பருவம் அடையும் போது பாலியல், இனப்பெருக்கம் குறித்து அவர்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கும். குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி பேசும்போது, உங்களுடைய வயது மற்றும் வளர்ச்சியின் அளவைக் கருத்தில் கொண்டு, உங்கள் பிள்ளை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விஷயங்களை விளக்குவது முக்கியம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் வெவ்வேறு கட்டங்களில் பாலியல் தொடர்பான புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

குழந்தை பருவம்: 12 முதல் 24 மாதங்கள்

இந்த வயதுடைய குழந்தைகள் பிறுப்புறுப்பு உள்ளிட்ட அனைத்து உடல் பாகங்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் உடல்நலப் பிரச்சினைகள், காயங்கள் அல்லது பாலியல் வன்முறைகளை நன்றாக புரிந்துகொள்ள முடியும். தவிர, மற்ற பாகங்களை போல இதுவும் இயல்பானவை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். இதனால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும் உடல் மீதான நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கிறது.

பள்ளி பருவம்: 2 முதல் 4 வயது வரை

பள்ளி செல்லும் பருவம் உடைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு இனப்பெருக்கம் என்றால் என்ன? குழந்தைகள் எப்படி உருவாகின்றன? விந்து மற்றும் கருப்பையின் பயன்பாடுகள் குறித்து புரிந்துகொள்ள இயலும் என அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன. உங்கள் குழந்தை பிறந்த கதை மூலம் இதை அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும், குடும்பங்களின் பணி என்பது குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது முக்கியம்.

முன் இளமை பருவம்: 9 முதல் 12 வயது வரை

இந்த வயதில் இருக்கும் குழந்தைகளிடம் பாதுகாப்பான பாலியல் செயல்பாடு மற்றும் கருத்தடை சாதனங்கள் குறித்து சொல்லி தர வேண்டும். பாலியல் நோய் தொற்றுகள், குறித்த அடிப்படை தகவல்களை தெரியப்படுத்துவது நல்லது. இளமை பருவத்தை நெருங்கும் குழந்தைகள் பாலியல் ரீதியான சுறுசுறுப்பை பெற்றிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பதின் பருவம்: 13 முதல் 18 வயது வரை

பதின்வயதினர் மாதவிடாய் மற்றும் இரவுநேர விந்து உமிழ்வு பற்றிய விரிவான தகவல்களைப் பெற வேண்டும். மேலும் அவை இயல்பானவை, ஆரோக்கியமானவை என்பதை அவர்களுக்கு உணர்த்துவது அவசியம். கர்ப்பம் குறித்து புரிதல், எஸ்.டி.ஐ குறித்த தகவல், பாதுகாப்பான உடலுறவு பற்றிய வழிமுறைகள் உள்ளிட்ட தகவலை இந்த வயதினர் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

Tags:
Next Story
Share it