தைராய்டு பிரச்சனை  இருந்தாலும், உடல் பருமனை குறைக்கலாம் எப்படி? 

'ஹைப்போதைராய்டிசம்' என்பது உடலில் அதிக கொழுப்பை உருவாக்கும். இதனால் பாதிக்கப்பக்கப்பட்டவர்கள் உடல் பருமனை குறைப்பது என்பது மிகவும் கடினமாக விஷயம். எனினும், சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 தைராய்டு பிரச்சனை  இருந்தாலும், உடல் பருமனை குறைக்கலாம் எப்படி? 
X

தைராய்டு பிரச்சனை பொதுவாக இரண்டு வகைப்படும்:

தைராய்டு என்பது கழுத்தின் முன் பகுதியில் உள்ள சுரப்பியாகும். இந்த சுரப்பி உடலின் மெட்டபாலிச அளவை சரியாக வைத்துக் கொள்வதுடன், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஹார்மோன்களை சுரக்கிறது

ஆரோக்கியமற்ற உணவு முறை, உடற்பயிற்சியின்மை போன்ற கார‌ணங்களால், தைராய்டு சுரப்பியில் பிரசச்சனை ஏற்படுகிறது. இது ஹைப்பர் தைராய்டு, ஹைப்போதைராய்டு என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஹைப்போதைராய்டிசம் உடலில் அதிகமாக கொழுப்பை உருவாக்குகிறது. ஹைப்பர் தைராய்டு மிக மோசமாக உடல் எடை இழப்பிற்கு காரணமாக அமைகிறது.

 தைராய்டு பிரச்சனை  இருந்தாலும், உடல் பருமனை குறைக்கலாம் எப்படி?

ஹைப்போ தைராய்டினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் பருமனை குறைக்க கட்டாயம் செய்ய வேண்டியவை:

 தைராய்டு பிரச்சனை  இருந்தாலும், உடல் பருமனை குறைக்கலாம் எப்படி?

உணவில் புரதங்கள் மற்றும் ஃபைபர் நிறைந்த உணவு பொருள்களை சேர்த்து கொள்ள வேண்டும் . இவற்றை உண்வில் சேர்த்து கொள்வதினால் அதிக நேரம் பசியின்றி இருக்க முடியும். இதனால் உடல் பருமனை குறைப்பதற்கான சாத்தியம் உருவாகிறது.

நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பொதுவாக நார்ச்சத்து முட்டை, கோழி, பருப்பு வகைகள், பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறாஇந்துள்ளது.

புரோட்டீன்கள் மற்றும் ஃபைபர் தவிர, உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் பட்டாணி வகைகளில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

உடல் பருமனை குறைப்பதில் அயோடின் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயொடின் நிறைந்த பொருட்களை உண்வில் சேர்த்துகொள்ள வேண்டும்:

தினசரி உடற்பயிற்சியை உறுதி செய்ய கொள்ள வேண்டும். இது நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல், யோகா போன்ற உடற்பயிற்சிகளாக இருப்பது சிறந்தது.

சோர்வினை நீக்கவும் , வளர்சிதை அதிகரிக்கவும் தண்ணீர் உதவி செய்யும். எனவே, போதுமான அளவிற்கு தண்ணீரை அருந்த முயற்சிக்க வேண்டும். தண்ணீர் தவிர, வெள்ளரிக்காய், எலுமிச்சை கலந்த தண்ணீர் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.

போதுமான அளவு தூங்கத்தை மேற்கொள்ள வேண்டும், பொதுமான நேர தூக்கம் உடல் கொழுப்பை எரிக்க உதவும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:

 தைராய்டு பிரச்சனை  இருந்தாலும், உடல் பருமனை குறைக்கலாம் எப்படி?

ஜங் புட் மற்றும் நொறுக்கு தீணிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். எண்ணையில் பொறித்த உணவுகள், உடலில் ஊட்டச்சத்தை சேரவிடமால், கொழுப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.எனவே, இத்தகைய பொருள்களை அரவே தவிற்பது நல்லது.

சர்க்கரை சேர்த்துகொள்வதை குறைக்க வேண்டும். அதாவது, வெள்ளை சர்க்கரை மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட மிட்டாய்கள், சாக்லேட், மற்றும் பிற பேக்கரி பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய கொழுப்பு மற்றும் கலோரிகல் அதிகமான, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.. முட்டைகோஸ், காளிஃப்ளவர், புரோக்களி போன்ற காய் வகைகளை, உணவில் சேர்த்து கொள்ள கூடாது.

newstm.in

newstm.in

Next Story
Share it