கொரோனா வைரஸ்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

உலகம் முழுக்கவே பெரும் அதிர்ச்சியையும், உயிர் பயத்தையும் காட்டி வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ், லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. கொரோனா வைரஸ்கள் என்பது பாலூட்டிகள் மற்றும் பறவைகளில்

கொரோனா வைரஸ்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
X

உலகம் முழுக்கவே பெரும் அதிர்ச்சியையும், உயிர் பயத்தையும் காட்டி வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ், லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. கொரோனா வைரஸ்கள் என்பது பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் குழு ஆகும். மற்ற வைரஸ்களை போல இல்லாமல், நினைத்தபடி தன் உருவத்தை மாற்றி கொள்ளும் திறனை படைத்தது இந்த கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய மாநிலத்தில் 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தின் மிகப் பெரிய இறைச்சி சந்தைபகுதியில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இப்படி விலங்குகளின் இறைச்சியில் இருந்து தான் மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. நுரையீரலை தாக்கி, நிமோனியா காய்ச்சலை உண்டாக்கி உயிரையே பறிக்கும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தான் இப்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

முதலில் காய்ச்சலில் தொடங்கி, தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். பின்னர், சளி, ஜலதோஷம், வாந்தி, வயிற்றுப் போக்கு, மூட்டு வலி பசின்மை இவைபடிப்படியாக அதிகரிக்க தொடங்கும். சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்கி மூச்சுத்திணறலும் ஏற்படும்.

வழக்கமாக புதுவித வைரஸ்நோய் பரவினால் அதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அதை மேலும் பரவ விடாமல் தடுக்க முடியும். கொரோனா வைரஸ்களால் தாக்கப்பட்டால், மீள்வதற்கான மருந்துகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ்களைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அவற்றின் தொற்று ஏற்படாமலிக்க நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதன் மூலமாக அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும். சத்தான உணவுகளையும், காய்கறிகளையும் உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய இயலும். தினந்தோறும், பழ வகைகளையும், காய்கறிகளையும் அதிகளவில் உட்கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் சி சத்துள்ள பழங்களையும், காய்கறிகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை அசைவ உணவுகளை கொஞ்ச காலத்திற்கு தவிர்த்து விடுங்கள். அதிலும், முழுதாக வேகாமல், அரைகுறையாக வெந்த மாமிசங்கள் தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வரவேற்பு பொருளாக அமைகிறது.

-டாக்டர் வி. ராமசுந்தரம்

newstm.in

Tags:
Next Story
Share it