1. Home
  2. ஆரோக்கியம்

கொளுத்தும் வெயிலில் இதம் தரும் சுவையான கம்மங்கூழ் - செய்வது எப்படி ?

1

 எந்த காலமாகி இருந்தாலும் நமது உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கம்பங்கூழ் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.  தமிழர்களின் தொன்றுதொட்ட உணவுகளுள் ஒன்றாக கம்மங்கூழ் உள்ளது. முன்னோரு காலத்தில் அனைவரது வீட்டிலும் மிகச் சாதரணமாக தயார் செய்யப்பட இந்த கம்மங்கூழ் தற்போது காணுவதே அறிய ஒன்றாக உள்ளது. இவற்றை தள்ளுவண்டி கடைகளில் மட்டுமே இப்போது நம்மால் காண முடிகிறது.

கோடைகாலத்தில் கம்பங்கூழ் குடித்தால், உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதுடன் உடல் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியாக்கும். சுவையான கம்மங் கூழ் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: கம்பு - கால் கிலோ, மோர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 20, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும்.

கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.

Trending News

Latest News

You May Like