இயற்கையாக பழுத்த மாம்பழங்களா இல்லை கெமிக்கல் மூலம் பழுத்ததா எப்படி கண்டுபிடிப்பது ?

இயற்கையாக பழுத்த மாம்பழங்களா இல்லை கெமிக்கல் மூலம் பழுத்ததா எப்படி கண்டுபிடிப்பது ?

இயற்கையாக பழுத்த மாம்பழங்களா இல்லை கெமிக்கல் மூலம் பழுத்ததா எப்படி கண்டுபிடிப்பது ?
X

கோடையில் மகிழ்ச்சியைக் கொடுப்பது மாம்பழங்கள் தான். செந்தூரம், பங்கனபள்ளி, அல்போன்ஸா, ருமானியா, மல்கோவா, ராஸ்பூரி, இமாம்பஸன், சர்க்கரைக்குட்டி இன்னும் இன்னும் 100 வகையான மாம்பழங்கள் சந்தையில் கொட்டிக் கிடக்கிறது.

பழங்களின் அரசன். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை சொல்லும் போதே மனதில் மகிழ்ச்சியையும் நாவில் இனிப்பையும் சேர்த்து கொடுக்கும். தற்போது மாம்பழ இனிப்பு கசப்புகளையே கொடுக்கிறது. காரணம் கடந்த 10 வருடங்களாக மாம்பழத்தை இயற்கை முறையில் இல்லாமல் உடலுக்கு தீங்கு தரக்கூடிய செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து மாம்பழ ரசிகர்களிடம் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மரத்தில் இருந்து கசியும் எத்திலீன் வாயுவால் இயற்கையாக பழுக்க வேண்டிய மாம்பழத்தை மரங்களில் இருந்து முன்கூட்டியே பறித்து விடுகிறார்கள். பிறகு வெல்டிங் பட்டறையில் பயன்படுத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும் கால்சியம் கார்பைடு கற்களைத் துணியில் பொட்டலமாக மடித்து மாங்காய் குவியல்களின் நடுவில் போட்டு பழுக்க வைக்கிறார்கள். இன்னும் சிலர் கார்பைடு கற்களைப் பொடியாக்கி ஸ்ப்ரே மூலம் மாங்காயின் மீது அடித்து பழுக்க வைக்கிறார்கள்.

இம்முறையில் மாம்பழங்கள் 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுத்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கற்களில் நச்சுத்தன்மை கொண்ட அசிட்டிலின் வாயு உள்ளது. மாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்துகள் ஆவியாக மாற்ற இந்த வாயு உதவுகிறது. இந்த மாம்பழங்கள் உடலில் பல உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது அதிகரிக்கும் பட்சத்தில் புற்றுநோயைக் கூட உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

இராசயன முறையில் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் சாப்பிட்டால் கண், தொண்டை, மூக்கு, நுரையீரலில் எரிச்சல் உண்டாகும். நரம்பு மண்டலத்தை பாதிக்க செய்யும். தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவற்றை உண்டாக்கும். வயிற்றுவலி, சருமஅலர்ஜி உண்டாகும். அதற்காக வீதி தோறும் குவியல் குவியலாய் கொட்டிக்கிடக்கும் மாம்பழங்களைச் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்கிறீர்களா? தாரளமாக சாப்பிடுங்கள். ஆனால் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்று பார்த்து வாங்குங்கள். அதை கண்டுபிடிக்க சுலபமான வழியைக் கொடுத்திருக்கிறோம்.

  • மாம்பழத்தை நுகர்ந்து பாருங்கள். மாம்பழம் வாசனையாக இருந்தால் அது இயற்கை. இல்லையெனில் செயற்கை முறையில் பழுத்த பழம் என்று உறுதியாக சொல்லலாம்.
  • செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் காம்பு பகுதியை சற்று கீரினால் இலேசான புளிப்பு வாடை அடிக்கும். தோலை நீக்கினால் உள்ளே காயாகவே இருக்கும்.
  • செயற்கை முறையில் பழுத்த பழங்கள் முழுமையாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் சில இடங்களில் புள்ளிகள் கருகியது போல் இருக்கும். இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மஞ்சள் நிறமாகவும் இளமஞ்சள் கலந்தும் இருக்கும். பழத்தின் காம்பு பகுதி இறுதியாக மஞ்சள் நிறத்தில் மாறும். கறும்புள்ளிகள் அதிகம் நிறைந்திருக்கும்.
  • செயற்கை முறையில் பழுத்த பழங்கள் பளபளப்பாக அழகாக இருக்கும். பழங்களை நறுக்கி பார்த்தால் ஆங்காங்கே பழுத்திருக்கும். ஒருபுறம் காயாக இருக்கும். கையில் எடுத்து பார்த்தால் வெப்பமாக இருக்கும். செயற்கை முறையில் பழுத்த பழங்களின் தோல் கடினமாக இருக்கும்.
  • மாம்பழங்களை சாப்பிடும் போது நீரில் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதனால் இரசாயனம் கலந்திருந்தாலும் நீங்கிவிடும். தோலை நீக்கி சாப்பிட்டால் உடல் உபாதை பாதிப்பைத் தடுக்கலாம். அதனால் உங்களின் மாம்பழ ஆசையைத் தனித்துக்கொள்ளும் அதே நேரத்தில் ஆரோக்யம் குறையாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
Next Story
Share it