அழுது கொண்டே இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?
பிறந்த குழந்தைகள் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர்களால் வாய் திறந்து கூற முடியாது. குழந்தைகள் தங்கள் உடலில் அசௌகரியம் ஏற்பட்டு இருப்பதை அழுகை மூலமாக வெளிப்படுத்துவர்.
குழந்தைகள் திடீரென வீறிட்டு வீல்வீலென அழுது கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அழும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது, ஏன் இவ்வாறு அழுகிறார்கள், என்ன காரணம் தெரியுமா
- குழந்தைகள் பிறந்த பின் தான், அவர்களின் உடல் உறுப்புகள் நன்கு பலம் பெற்று ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்; அந்த வளர்ச்சி காலகட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதாவது போதிய உணவு, ஊட்டச்சத்துக்கள், உறக்கம் போன்றவை கிடைக்காமல் மற்றும் போதிய உடல் வளர்ச்சி ஏற்படாமல் இருந்தால், அந்த சமயங்களில் குழந்தைகள் அதிக சோர்வாய் உணர்வார்கள், அவர்களின் சோர்வு உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று அறியாமல் அழுது கொண்டே இருப்பார்கள்.
- குழந்தைகள் சோர்வாய் உணரும் சமயங்களில் அல்லது தூங்க நினைக்கும் நேரங்களில் குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவுகள் ஏற்பட்டால், அவற்றை குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனில் குழந்தைகள் தங்கள் கோபத்தை, இயலாமையை அழுகையாக வெளிப்படுத்துவர்.
- பொதுவாக குழந்தைகள் சோர்வாக, உறக்கம் கொள்ளாமல், உண்ண முடியாமல் தவிக்கும் நேரங்களில் அவர்கள் மீது படும் ஒளி, காற்று, அணைப்பு போன்ற அனைத்துமே அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்; அது அழுகையாக வெளிப்படும்.
- குழந்தைகளை அவர்கள் சுகமில்லாத பொழுது அடிக்கடி பலர் தூக்க நேர்ந்தாலும் குழந்தைகள் பொறுமை இழந்து வெடித்து அழ தொடங்கி விடுவார்கள்.
- குழந்தைகள் உட்கொண்ட உணவுகள் அல்லது மருந்துகள் அவர்களின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி இருந்தால், அதன் காரணமாக குழந்தைகள் அதிகம் அழுவர்.
- குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான அளவு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை எனில், அந்த நேரங்களில் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பர்; ஆகையால், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் போதுமான அளவு உணவினை அளித்து வருவது பெற்றோர்களின் கடமை!