1. Home
  2. ஆரோக்கியம்

தம்பதிகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்..?

1

சமீபத்தில் நடத்த ஆய்வில் திருமணமான தம்பதிகள் ஆரம்பத்தில் 6 மாதங்கள் முதல் 158 நாட்களுக்குள் 78 முறை உடலுறவில் ஈடுபடுகிறார்கள். அதில், பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க மாதத்திற்குக் குறைந்தது 13 முறையாவது உடலுறவு கொள்வதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதனால் 43 சதவீதம் பேர் கருத்தரிப்பதில் சிரமம் இருப்பதாகவும், அதற்காக அவர்கள் அதிகம் கஷ்டப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் : தம்பதிகள் ஒரு நாளைக்குப் பல முறை உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரித்துவிடலாம் என்பது முற்றிலும் தவறான ஒன்று .அது உண்மை அல்ல.

சிலர் கருத்தரிப்பதற்கு உடலுறவு பொசிஷனும் முக்கிய காரணம் என்று நம்புகிறார்கள். அப்படி மிகவும் பிரபலமான நிலைகளாக 3 பொசிஷன்களை முயற்சி செய்கின்றனர். அதில் அதிகமாக முயல்வது டாக்கி ஸ்டைல் (doggy style). தம்பதிகள் 36 % பேர் முயற்சி செய்கின்றனர்.

சொல்லப்போனால் அடிக்கடி உடலுறவு கொள்வது மூலம் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இதற்கு மாறாகக் குழந்தை வேண்டும் என்று விரும்பும் தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொண்டால் பலன் கிடைக்கும்.

மேலும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் ஆகும். மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 14வது நாளில் உங்களுக்கு அண்டவிடுப்பு நாள் ஆரம்பமாகும். இந்தச் சமயத்தில் நீங்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like