1. Home
  2. ஆரோக்கியம்

வீட்டில் தயாரிக்கலாம் ஊட்டச்சத்து பானம்...

வீட்டில் தயாரிக்கலாம் ஊட்டச்சத்து பானம்...

குழந்தைகள் வளர்ச்சிஅதீதமாகவும்,ஆரோக்யமாகவும் இருக்கசத்தானபானங்கள்இதுதான் என்று பல பெயர்களில் உலாவரும் சத்து பானங்கள் இல்லாத காலங்களில் கூட குழந்தைகளின் வளர்ச்சி அதீதமாக ஆரோக்யமாக இருந்தது. ஆனால் சத்துமிக்க பானங்கள் பலவும் உலா வரும் இக்காலத்தில் தான் குழந்தைகள் பல்வேறு ஆரோக்ய குறைபாடுகளுக்கு உள்ளாகிறார்கள்.

அதிக விலை கொடுத்து வாங்கித்தரும் சத்துபானங்கள் கொடுக்காத ஊட்டச்சத்துக்களை அள்ளித் தரும் சத்துக்கஞ்சியை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாமா? அம்மாச்சிகளும்,அப்பத்தாக்களும் கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைத்து உப்பு அல்லது கருப்பட்டி சேர்த்து கஞ்சி யாக காய்ச்சி குடிப்பார்கள்.இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. ஆனால் குழந்தைகளுக்கான சத்துக்கஞ்சியை நாமே வீட்டிலேயே தயாரித்துக்கொடுக்கலாம். ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கக் கூடிய இந்த கஞ்சிமாவை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாமா?

சத்துக்கஞ்சி
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு - 500 கிராம்
ஜவ்வரிசி- 200 கிராம்
கம்பு - 200 கிராம்
கோதுமை- 250 கிராம்
பார்லி -100 கிராம்
கறுப்பு மூக்கடலை, வெள்ளை மூக்கடலை- தலா 50 கிராம்
புழுங்கல் அரிசி - 1 தம்ளர்
வரகு அரிசி, குதிரைவாலி - தலா அரைத்தம்ளர்
சோளம் -50 கிராம்
பொட்டுக்கடலை-100 கிராம்
ஏலக்காய்-10 கிராம்
முந்திரி, பாதாம் -தலா 100 கிராம்
சுக்கு - சிறு துண்டு.

செய்முறை:
கொடுத்திருக்கும் அனைத்துப்பொருள்களையும் தனித்தனியாக வறுத்து அகன்ற தட்டில் கொட்டி காயவிடவும்.ஆறியதும் மிஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.அதை நன்றாக ஆற வைத்து காற்றுப்புகாத டப்பாவில்கொட்டி வைக்கவும். சிறிய டப்பாவில் மாவை எடுத்து வைத்து பயன் படுத்தவும்.

மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அரைத்தம்ளர் நீரில் இரண்டு டீஸ்பூன் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து மீண் டும் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து மிதமானத்தீயில் கைவிடாமல் கலக்கவும். பச்சைவாசனை போன பிறகு காய்ச்சிய பசும் பாலை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து குழந்தைகளுக்கு இனிப்புக்கு நாட்டுசர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

பெரியவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உப்பு கலந்து கொடுக்கலாம். பசும்பால் வேண்டாமென்றால் மோரில் கலந்து கொடுக் கலாம். விரத நாட்களில் இந்தக் கஞ்சி வலுவையும், ஆற்றலையும் கொடுக்கும். குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு, நோயாளிகளுக்கு என்று தனித்தனியாக விலை மிக்க ஊட்டச்சத்துக்களை வாங்கி பயன்படுத்துவதை விட ஒரே விதமான ஊட்டச்சத்துகளை வீட்டிலேயே தயாரிக்க லாம். சத்து பானங்கள் உண்மையில் சத்தானதாக இருக்க வீட்டிலேயே தயாரிப்பதுதான் நல்லது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like