வீட்டிலேயே தயாரிக்கலாம் "நேச்சுரல் ஹேர் டை" 

இன்ஸ்டன்ட் ஹேர் டை பயன்படுத்த தயங்குவோர், வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிக்கலாம். இதில் எவ்வித ரசாயனமும் இன்றி, முழுவதும் இயற்கை மூலிகைகளால், நீங்களே வீட்டில் தயாரிப்பது என்பதால் எவ்வித அச்சமும் இன்றி, ஆண், பெண் பேதமின்றி எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே தயாரிக்கலாம் நேச்சுரல் ஹேர் டை 
X

இன்றைய இளைஞர்கள் மத்தியில் இளநரை பிரச்னை அதிகம் காணப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மட்டுமின்றி, இல்லத்தரசிகளும், நரை முடியை மறைக்க ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். கடைகளில் விற்கும் ஹேர் டைகளை வாங்கி உபயோகித்தால், ரசாயன கலவையால் ஏதேனும் தோல் சார்ந்த ஒவ்வாமை வருமோ என்ற அச்சமும் காணப்படுகிறது.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து வகை ஹேர் டையிலும் பிரச்சனை என சொல்லிவிட முடியாது. எனினும், இன்ஸ்டன்ட் ஹேர் டை பயன்படுத்த தயங்குவோர், வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிக்கலாம். இதில் எவ்வித ரசாயனமும் இன்றி, முழுவதும் இயற்கை மூலிகைகளால், நீங்களே வீட்டில் தயாரிப்பது என்பதால் எவ்வித அச்சமும் இன்றி, ஆண், பெண் பேதமின்றி எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை பொடி, துளசி பொடி, செம்பருத்தி பொடி, கடுக்காய் பொடி, அவுரி இலை பொடி, மருதாணி பொடி இத்துடன் சிறிதளவு டீ டிகாக்ஸன்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

செய்முறை: மேற்கண்ட பொடிகளை தலா ஒரு ஸ்பூன் அளவு இரும்பு கடாயில் எடுத்துக்கொண்டு, அவற்றுடன் சிறிதளவு, டீ டிகாக்ஸனை கலந்து, 4 - 5 மணி நேரம் ஊற வைக்கவும். முதல் நாள் இரவு கலந்து வைத்து மறு நாள் காலையிலும் இதை பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்னை இருப்போர், சிறிதளவு யூக்லிப்டாஸ் தைலத்தை கலந்துகொள்ளலாம்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

அவ்வளவுதான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேச்சுரல் ஹேர் டை தயார். இதை, எண்ணெய் பிசுக்கு இல்லாத உலர்ந்த தலைமுடியில் தடவி, 1 - 2 மணி நேரம் கழித்து, வெறும் நீரில் தலைக்கு குளித்தால், நரை முடி மறைந்து, கருக்கறுப்பாக காணப்படும். இந்த கலவையை பயன்படுத்திய நாட்களில், ஷாம்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்கவும்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

மேலும் இரண்டு நாட்களுக்குதலைக்கு வேறு எந்த ரசாயன கலவை எண்ணம் பயன்படுத்தாமல், வெறும் தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்தினால் நல்ல பலன் தரும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால், நாளடைவில், நிரந்தரமாவே நீங்கள் கருமை நிற கூந்தலை பெறலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it