எச்.ஐ.வி. தொற்றை உண்டாக்குகிறதா டாட்டூஸ்...

இன்றைய தலைமுறையினர் வலிமிகுந்தாலும் பரவாயில்லை என்று டாட்டூஸ் சென்டரை நோக்கி படையெடுக்கிறார்கள். டாட்டூஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

எச்.ஐ.வி. தொற்றை உண்டாக்குகிறதா டாட்டூஸ்...
X

பட்டு போல் மின்னும் சருமத்தை மேலும் மேலும் மினுமினுப்பாக்குகிறேன் என்று இராசயனம் கலந்த வண்ணக்கலவையை பூசிக்கொள்வதற்கு பெயர் தான் டாட்டூஸ். இளைய தலைமுறைக்கு இது ஃபேஷன். இது லேட்டஸ்ட் டிரெண்டியாக கண்டுபிடித்ததல்ல இது.

நமது முன்னோர்கள் கைகளில் அழகாக பிடித்த பெயரையோ, பாட்டிகள் நான்கு புள்ளி கோலத்தையோ பச்சை குத்தி கொள்வார்கள். இதனால் அவர்களது ஆரோக்யம் ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்ல.ஆனால் இப்போது டாட்டூஸ் சமாச்சாரம் எல்லாம் விபரீதங்களில் தான் முடிகிறது என்று மருத்துவர்களே சொல்கிறார்கள்.

கைகளில், கால்களில், முதுகு, கழுத்து, காது உச்சகட்ட ஃபேஷன் என்று கன்னங்களில் கூட டாட்டூஸ் அப்பிக்கொள்ளும் ஃபேஷன் பைத்தியங்கள் அதிகம். டாட்டூஸ் குத்துவதற்காக இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். பெயர்கள் முதல் விலங்குகள், பறவைகள், ஆன்மிக குறிகள், மலர்கள் என சுவற்றில் கிறுக்குவது போல் சருமத்தில் வரைந்து தள்ளுகிறார்கள் டாட்டூஸ் கிறுக்கர்கள். ஆரம்பத்தில் விளம்பர மாடல் கள்,அழகிகள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் டாட்டூஸ் குத்துவதைப் பார்த்து இளைய தலைமுறையினரும் போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

எச்.ஐ.வி. தொற்றை உண்டாக்குகிறதா டாட்டூஸ்...

நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக என்று இரண்டு வகையான டாட்டூஸ்கள் இருக்கின்றன. முதலாவது அழியாமல் இருக்கும். இதை அழிக்கவோ மாற்றவோ வேண்டுமானால் அறுவை சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சையால் மட்டுமே முடியும்.ஆனால் இதை போட்டுக்கொள்ள ஆகும் நேரத்தை விட அழிக்கும் போது அதிக நேரம் ஆகும். அதிக வலியைக் கொடுக்கும். அதிலும் வண்ணக்கலவையில் அதிக இராசயனம் சேர்ப்பதால் இதை அழிக்க பலமுறை இலேசர் சிகிச்சையை நாட வேண்டி வரும். அதிக பணமும் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

டாட்டூஸ் போடுவதால் உடலில் வேறு சில பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். உடலில் உள்ள இரத்த நாளங்கள், சரும பிரச்னைகள், மெல்லிய இரத்தக்குழாய்களில் பாதிப்பு,சிலருக்கு சரும புற்றுநோய் போன்றவை வருவதற்கும் கூட வாய்ப்புண்டு. மேலும் உடல் பிரச்னைக்காக ஸ்கேன் எடுக்க செல்லும்போது டாட்டூஸ் உள்ள இடங்களின் உட்பகுதி தெளிவாக தெரியாமல் போகும்.இதனால் நோயின் பாதிப்பை உணராமலே கூட போகலாம்.

தற்காலிக டாட்டூஸ்களும் விபரீதம் உண்டாக்குவதில் சளைத்ததல்ல. டாட்டூஸ் போட பயன்படுத்தப்படும் வண்ணக்கலவை சருமத்துக்கு ஒவ் வாமையை உண்டாக்கும். இதில் உள்ள வேதி பொருள்கள் கலந்த ரசாயனங்கள் மனித உடலுக்கு ஏற்றதல்ல. குறிப்பாக அடர்த்தி மிகுந்த நிறங்கள் மேலும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது.

மேலும் டாட்டூஸ் குத்துபவர்கள் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தும் போது நோய் தொற்று உண்டாக அதிக வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். சமயத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமலை நோய்கள் கூட தொற்றிவிடும் வாய்ப்புகள் உண்டு என்று அச்சமூட்டுகிறார்கள் அனுபவ மிக்க மருத்துவர்கள். இன்றைய தலைமுறையினர் வலிமிகுந்தாலும் பரவாயில்லை என்று டாட்டூஸ் சென்டரை நோக்கி படையெடுக்கிறார்கள். டாட்டூஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

டாட்டூஸ் மோகம் மாயையே. ஆரோக்யத்தை அழித்து அழிவுக்கு கூட்டிச்செல்லும் அரக்கன் டாட்டூஸ் என்பதே சரியாக இருக்கும்.

newstm.in

newstm.in

Next Story
Share it