1. Home
  2. ஆரோக்கியம்

இரத்த சோகையை ஏற்படுத்தும் ஹீமோகுளோபின் குறைபாடு


உடலில் அதிகமான அசதி, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, அதிக சோம்பல், மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல் களைப்பு போன்ற அறி குறிகள் அதிகம் தென்பட்டால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துள்ளதா? என்பதைப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள லாம்.

ஹீமோகுளோபின் நமது உடலில் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த புரதம். நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் முழவதும் கொண்டு செல்லும் பொறுப்பு இந்தப் புரதத்துக்கு உரியது. நீங்கள் ஆரோக்யமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு ஹீமோகுளோ பின் சரியான அளவில் இருப்பது முக்கியம்.

ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் உடம்பில் உள்ள அணுக்கள் சரியான முறையில் செயல்படக்கூடும். அணுக்களில் இருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை எடுத்துச் சென்று மீண்டும் நுரையீரலில் கொண்டு சேர்க்க ஹீமோகுளோபின் உதவுகிறது. ஆரோக்யமான வாழ்க்கைக்கு ஹீமோகுளோபின் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான முறையில் பராமரிக்க வேண் டியது மிகவும் அவசியமாகிறது.

ஹீமோகுளோபின் அளவு:
ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். . இந்த அளவில் மிகச்சிறிய மாறுதல்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடாது. ஆனால் 7 கிராமுக்கும் கீழ் குறையத் தொடங்கும் போது உடல் நலத்தில் பல் வேறு பாதிப்புகளையும், நாளடைவில் கடுமையான இரத்த சோகையையும் கூட ஏற்படுத்திவிடும் அபாயமுண்டு. தற்போது இரத்த குறைப்பாட் டால் ரத்தம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹீமோகுளோபின் குறைந்தால்:
ஹீமோகுளோபின் அளவு குறையும் போது சோர்வு, வலுக்குறைவு, மூச்சடைப்பு, மயக்கம், தலைவலி, வெளிறிய சருமம், உடையக்கூடிய நகங் கள், வேகமான இதயத்துடிப்பு மற்றும் பசியின்மை போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். மேலும் ஹீமோகுளோபின் அளவு மிக அதிகமாக குறைந்தால் அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். இதன் அறிகுறிகள் கடுமையாக இருக்கும்.

கர்ப்பக்காலத்திலோ அல்லது மாதவிடாய் காலத்திலோ பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது இயல்பான ஒன்றுதான். இதில் மிக முக்கிய காரணங்களாக இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பி 12 குறைபாடுகள் தான். பல நேரங்களில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதால் ஹீமோ குளோபின் அளவும் குறைந்துவிடும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
மாறிவரும் உணவுப் பழக்கம் ஹீமோகுளோபின் குறைய முக்கிய காரணமாகிறது என்பதை மருத்துவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். உண வால் இரத்தம் உற்பத்தியாவதில்லை என்றாலும் உணவில் இருக்கும் இரும்புச்சத்துகள் இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இரும்புச்சத்து வள மையாக உள்ள உணவுகளை உண்ணுங்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான கார ணமாக உள்ளது என நேஷனல் அனீமிய ஏஷன் கவுன்சில் கூறியுள்ளது.

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், கீரைகளில் முருங் கைக் கீரை, பாதாம், பேரீச்சம் பழம், பயறு, உலர் திராட்சை,அத்திப்பழம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல் லது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3 வேளையும் வேளைக்கு ஒன்றாக உலர் அத்திப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து நிறைந்த அத்திப்பழத்தால் ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு 1 கிராம் வரை உயரும்.

ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணத்தையும் அதிகரிக்க மருத்துவர்கள் என்ன பரிந்துரைக்கிறார்கள் என்பதையும் தொடர்ந்து பார்க்கலாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like