1. Home
  2. ஆரோக்கியம்

இந்தப் பழமொழியை கேள்விப்பட்டு இருக்கீங்களா ? பசித்தவனுக்கு பனங்கிழங்கு... பணக்காரனுக்கு பாதாம்..!

1

பனங்கிழங்கு என்பது ஒரு சீசனில் மட்டும் விளையும் கிழங்கு. குறிப்பாக மார்கழி முதல் மாசி வரை பனங்கிழங்கு சீசன் என்பார்கள். இந்த காலகட்டங்களில் அதிகமாகவே பனங்கிழங்கு கிடைக்கும், விலையும் மிகவும் மலிவாகவும் இருக்கும். இதில் பாதாமை போல் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் பி மற்றும் சி இதில் நிறைந்துள்ளது. ஒரு 100 கிராம் பனங்கிழங்கை உட்கொள்வோருக்கு 87 கிலோ கிராம் கலோரிகள் கிடைக்குமாம். ஒரு கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 77 கிராம் நீர்ச்சத்தும் இதில் உள்ளதாம்.

பாதாம் பருப்புக்கு இணையான சத்துக்கள் பனங்கிழங்கிலும் இருப்பதால்தான் பலவீனமாக இருப்பவர்கள் குறிப்பாக பாதாம் வாங்க வசதியில்லாத ஏழையாக இருப்பவர்கள்கூட இந்த கிழங்கை சாப்பிடலாம் என பல வைத்தியர்களும் பரிந்துரைப்பார்களாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். அதேசமயம் உடல் எடை மெலிந்தவர்கள் கூட எடை கூட வேண்டுமானால் இந்த பனங்கிழங்கை சாப்பிட அறிவுறுத்தப்படுவார்களாம்.

பனங்கிழங்கு ஆஸ்டியோபோராக்ஸிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை குறைக்கக் கூடியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரத்த விருத்தி செய்யும் என்றும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ரத்த சோகையை தீர்க்கும் என்பதாக சொல்லப்படுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இது இருக்கும் என்றும் குளிர்ச்சி தன்மையுடையது என்றும் சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகள் சர்க்கரை நோயாளிகளுக்கு என்றும் அவர்கள் சாப்பிடக்கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால் இந்த கிழங்கை சர்க்கரை நோயாளிகள் மிதமான அளவு சாப்பிடலாம் எனவும் ஒரு சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் நீங்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி இதனை சாப்பிடுவதே நல்லது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக் கூடிய என நம்பப்படுகிறது. அதைப்போல பனங்கிழங்கு உள்ள பல சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை கூட்டச் செய்கிறது அதனால் சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது இந்த கிழங்கை சாப்பிடலாம் என சொல்லப்படுகிறது.

Trending News

Latest News

You May Like