கேடு தரும் கேன்வாட்டரும், ஆபத்து தரும் ஆர்.ஓ. வாட்டரும்...

நீரில் இருக்கும் மாசுக்கள் அதிகரித்து வருவதால் நீரை சுத்திகரிக்க பயன்படுத் தப் படும் கருவி ஆர். ஓ. வாட்டர். மக்களின் மனநிலைப்படி ஆர்.ஓ.வாட்டர் அல்லது கேன் வாட்டர்தான் தூய்மையான தண்ணீர் என்னும் மனோ பாவத்துக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். ஆனால்...

கேடு தரும் கேன்வாட்டரும், ஆபத்து தரும் ஆர்.ஓ. வாட்டரும்...
X

உணவு இல்லாமல் கூட மனிதன் வாழ்ந்துவிட முடியும். ஆனால் நீரில்லாமல் இரண்டு நாள் கூட இருக்க முடியாது. அதனால் தான் தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தா புண்ணியம் என்று சொன்ன முன்னோர்கள் காலத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கவேண்டிய அவசியம் இருந்த தில்லை.

ஆனால் இப்போது பெரும்பாலான இடங்களில் குழாய் நீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது தரமானதாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அதைக் குடிப்பதை விட தூய்மையாக பல முறை சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் கேன் வாட்டர்கள் தான் மக்களால் விரும் பப்படுகிறது.

கேன் வாட்டர், பாட்டில் வாட்டர், பேக்கெட் வாட்டர் என்று எங்கு திரும்பினாலும் தண்ணீர் விற்பனை சூடுபறக்கிறது. அதிலும் தற்போது பெருகி வரும் தண்ணீர் பிரச்னையில் கேன் வாட்டர் கிடைப்பது கூட திண்டாட்டமாகிறது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர் எல்லாமே சத்துக்க ளையும் சேர்த்து சுத்திகரிக்கப்பட்டே வருகிறது என்கிறார்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள். காரணம் தரமான தண்ணீர் கேன்களுக்கிடை யில் தரமற்ற தண்ணீர் கேன்கள் அதிகம் பெருகியிருக்கின்றன.

பொதுவாக கேன்வாட்டரை உபயோகம் செய்து முடித்ததும் மீண்டும் அதை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவதாக இருந்தால் அந்தக் கேனை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படியா நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒரு நீர் நிலையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் பல்வேறு வகையான சுத்திகரிப்புகளுக்குப் பிறகு பாட்டிலிலோ கேனிலோ அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இப்படி அடைக்கப்படும் தண்ணீர் மினரல் வாட்டர் என்றழைக்கப்படுகிறது. ஆனால் மினரல் என்பது வேறு என்பதை மக்கள் உணர்ந்தி ருக்கிறார்களா என்பது சந்தேகமே.

இதேப் போல்தான் வீட்டில் பயன்படுத்தப்படும் ஆர்.ஓ. வாட்டரும். நீரில் இருக்கும் மாசுக்கள் அதிகரித்து வருவதால் நீரை சுத்திகரிக்க பயன்படுத் தப் படும் கருவி ஆர். ஓ. வாட்டர். மக்களின் மனநிலைப்படி ஆர்.ஓ.வாட்டர் அல்லது கேன் வாட்டர்தான் தூய்மையான தண்ணீர் என்னும் மனோ பாவத்துக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நிலத்தடி நீர்தான் தூய்மையானது. நமது உடலுக்கு உணவுகள் தரும் சத்துக்களைப் போலவே தண்ணீரும் கொடுக்கிறது.

தண்ணீரில் இருக்கும் தாது பொருள்களை நீக்கினால் எலும்பு தேய்மானப் பிரச்னைகள் உண்டாகிறது. அதனால் ஆர்.ஓ. வாட்டர் மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு தரும் என்று தற்போது மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். உடல் சோர்வு, தசைபிடிப்பு, உடல் வலு இழப்பு போன்ற அபாயங் களைச் சந்திக்க முக்கிய காரணமாக ஆர்.ஓ வாட்டர் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆர்.ஓ வாட்டர்கள் நச்சுக்களோடு சத்துக்களையும் சேர்த்தே நீக்கி விடுகிறது. தண்ணீரில் இருக்கும் கால்சியம், மெக்னீஷியம் தாதுபொருள்களும் நீங்கிவிடுவதாலேயே இது குடிப்பதற்கு ஏற்ற நீரல்ல என்கிறார்கள். ஏனெனில் இம்முறையில் சுத்திகரிக்கும் போது நீங்கும் தாதுபொருள்கள் குறைபாட்டால் உடல் நல பாதிப்புகளை உண்டாக்குகிறது. உடனடியாக இந்தக் குறைபாடு ஏற்படாததால் இதன் பாதிப்பை மக்களும் உடனடியாக உணரமுடிவதில்லை.

ஆர்.ஓ வாட்டர் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உலக சுகாதார அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இதிலும் முன்னோர்களையே ஃபாலோ செய்வோம். ஆம் இருக்கவே இருக்கு குறைந்த பட்ஜெட்டில் பானையும், செம்பு தவளையும். மாறுங்கள். பழமைக்கு மாறுங்கள். ஆரோக்யத்தைக் கொடுப்பது பழமை பழக்கவழக்கங்களே...


newstm.in

newstm.in

Next Story
Share it