பத்தே ரூபாயில் ஆரோக்யம் கொடுக்கும் கீரைகள்...

உடலில் ஏற்படும் அநேக குறைபாடுகளை கீரைகள் நீக்குகிறது. இளைப்புக்கு, இரத்த சுத் திக்கு, சரும பிரச்னைக்கு, நரம்புத் தளர்ச்சிக்கு, சிறுநீரக கற்களுக்கு, நீரிழிவு கட்டுப்படுத்துவ தற்கு, கருப்பை ரணம், வயிற்றுப்புண், மலச்சிக் கல், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, அலர்ஜி, பித்தம், நினைவாற்றல், இரத்தசோகை, ஹீமோ குளோபின் அளவு,மூல நோய், முடக்கு வா\தம், கூந்தல் உதிர்வு, இளநரை, அஜீரணம் இப்படி இன்னும் இன்னும்...

பத்தே ரூபாயில் ஆரோக்யம் கொடுக்கும் கீரைகள்...
X

என்ன சாப்பிட்டா ஆரோக்யம் மட்டும் கிடைக்கும் என்று கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் கிடைத்து விடும். இருக்கவே இருக்கு கீரைகள். கீரைகளில் தான் எத்தனை வகைகள். மூத்தோர்கள் பயன்படுத்திய அளவுக்கு இன்று நாம் பயன்படுத்துவதில்லை என்றாலும் 50 வகையான கீரை கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

அஞ்சு ரூபாய் டாக்டர் மாதிரி பத்து ரூபாய்க்கு ஆரோக்யம் கொடுப்பது கீரை கட்டுகள் தான். உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் சிறுநீர கம் காக்கும் காசினி கீரை, பித்தத்தைத் தெளிய வைக்கும் அகத்திக்கீரை, வெள்ளை நோயைக் கட்டுப்படுத்தும் பசலைக்கீரை என்று ஒவ்வொரு கீரைகள் தனித்துவமாக அதைப் பாதுகாக்க பொறுப்பேற்கிறது என்றாலும் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான சத்துக்களையும் கீரைகள் கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது.

கீரைகளில் இரும்புச்சத்து, தாதுப்பொருள்கள், சுண்ணாம்புச்சத்து பீட்டா கரோடின், வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ், ஃபோலில் ஆசிட் போன்ற அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது. உடலில் புரதச்சத்துக்களைக் கூட்டி உடல் வளர்ச்சியைக் கொடுக்கும் கீரைகளை அதன் சத்துக்களை வகைப்படுத்தி வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது உணவில் சேர்க்க வேண்டியது இல்லத்தரசிகளின் கடமை என்று சொல்லலாம்.

தற்போது மாறிவரும் உணவு பழக்கங்களில் ஃபாஸ்ட் புட் உணவு வகைகளால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள் சிறுவயதிலேயே பார்வைக்குறைபா டுக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் அதிக சதவீதத்தில் உள்ள குழந்தைகள் கண்பார்வை குறைபாட்டுக்கு உள்ளாவதாக ஆய்வு ஒன்று தெரி வித்திருக்கிறது.

வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்யத்துக்கும் முக்கியமானது கீரைவகைகள். கீரைகளில் இருக்கும் கரோடின் சத்து வைட்ட மின் ஏ வாக மாறி கண்பார்வையைக் காக்கிறது. எல்லா கீரைகளிலும் இந்த கரோடின் சத்துக்கள் மிகுந்திருக்கிறது. ஆனால் நீண்ட நேரம் இக்கீரை யைச் சமைக்கும் போது இதில் உள்ள கரோடின் சத்துக்கள் வீணாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்பார்வைக்கு கீரை வகைகள் என்பது உதாரணத்துக்காக சொல்லப்பட்ட ஒரு குறைபாடு மட்டுமே. உடலில் ஏற்படும் அநேக குறைபாடுகளை கீரைகள் நீக்குகிறது. இளைப்புக்கு, இரத்த சுத்திக்கு, சரும பிரச்னைக்கு, நரம்புத் தளர்ச்சிக்கு, சிறுநீரக கற்களுக்கு, நீரிழிவு கட்டுப்படுத்துவதற்கு, கருப்பை ரணம், வயிற்றுப்புண், மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, அலர்ஜி, பித்தம், நினைவாற்றல், இரத்தசோகை, ஹீமோ குளோபின் அளவு,மூல நோய், முடக்குவாதம், கூந்தல் உதிர்வு, இளநரை, அஜீரணம் இப்படி இன்னும் இன்னும் பல குறைபாடுகளைச் சீர் செய்யும் அருமருந்தாக கீரைவகைகள் இருக்கிறது.

கீரைகளில் எத்தனை வகைகள் என்பதும் ஒவ்வொன்றிலும் என்னென்ன சத்துக்கள் என்பதையும் அறிந்துகொண்டால் உரிய முறையில் சமைத்து பலனடையலாம். நாகரிக உணவில் இருக்கும் நாட்டத்தை பாரம்பரிய உணவு பக்கம் திருப்பும் வகையில் ரெஸிபிகளை மாற்றி சமைக்கலாம். கீரை குழம்பு, கீரை கூட்டு, கீரை பொறியல் என்பதைத் தவிர கீரை மசியல்,கீரை துவையல், கீரை பொடி, கீரை தோசை, கீரை சப்பாத்தி, கீரை தால் இப்படி வெரைட்டியான ரெஸிபிகளை வெரைட்டியாக ஆனால் சாப்பிடும்படியாக சுவையாக செய்யுங்கள்.

ஆரோக்யம் கூடிய சந்தோஷத்தோடு வலம்வருவீர்கள்.


newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it