உடல் கொழுப்பை கரைக்கும் பச்சை மிளகாய்

உடல் கொழுப்பை கரைக்கும் தன்மை பச்சை மிளகாயில் இருப்பதால். உடல் பருமனை குறைக்க எண்ணுவோர் தங்களது உணவு பட்டியளில் கட்டாயம் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளலாம்.

உடல் கொழுப்பை கரைக்கும் பச்சை மிளகாய்
X

பச்சை மிளகாய் என்றாலே சுட்டெரிக்கும் காரம் தான் நினைவிற்கு வரும். ஆனாலும், மிளகாய் இல்லாமல் எந்த சமையலறையும் இருக்க முடியாது. அதிகமாக மிளகாய் சாப்பிட்டால் வயிற்றில் பிரச்சனை ஏற்படும் என நமக்கு தெரியும். ஆனால், பல நூற்றாண்டுகளாக நம் உணவோடு பயணிக்கும் பச்சை மிளகாய் நமக்களிக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இனி மிளகாயை தவிற்க‌மாட்டோம்..

பச்சை மிளகாய் புற்று நோயை தடுக்கிறது.
பச்சை மிளகாயில் அதிகமாக ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி புற்று நோயை வர விடாமல் உடலை பாதுகாக்கும்.

இதயத்தை பாதுகாக்கும் பச்சை மிளகாய் :

இரத்ததில் சேரும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது பச்சை மிளகாய். இது இதயக்குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்து இதயத்தை பாதுகாக்கிறது

உடல் கொழுப்பை கரைக்கும் பச்சை மிளகாய்

மூளை பாதுகாப்பிற்கு சிறந்தது;
குளிர் நேரங்களில் மூளையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய பச்சை மிளகாயை உட் கொள்வது நல்ல தீர்வை தரும்.

ஜீரணத்தை தூண்டும் உணவு :
ஜீரண தன்மை அதிகப்படுத்த உதவுவதுடன், வயிற்றில் ஏற்படும் அல்ஷர் நோய்க்கு ஏற்ற மருந்தாக பச்சை மிளகாய் இருக்கிறது.

கண்களுக்கு ஏற்ற மிளகாய்:
வைட்டமீன் சி,அதிகளவில் நிறைந்துள்ளதால், கண்களை பாதுகாப்பதுடன் , சருமத்தை இளமையுடன் வைத்து கொள்ள உதவுகிறது பச்சை மிளகாய்.

உடல் கொழுப்பை கரைக்கும் பச்சை மிளகாய்

சர்க்கரை நோய்க்கான மருந்து:
பச்சை மிளகாய் ரத்த சர்க்கரை அளவை சமனில் வைத்துக்கொள்ள உதவுவதால். சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியத்தை குறைக்கிறது.

ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்;
ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்று நோயிலிருந்து பச்சை மிளகாய் காக்கிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

உடல் கொழுப்பை கரைக்கும் பச்சை மிளகாய்

சரும தொற்றினை தவிற்கும்:
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா தன்மை நிறைந்துள்ளதால் சருமத்தில் ஏர்படும் பாக்டீரியா தொற்றுக்களை தவிர்க்கலாம்.

உடல் கொழுப்பை கரைக்கும்:
உடல் கொழுப்பை கரைக்கும் தன்மை பச்சை மிளகாயில் இருப்பதால். உடல் பருமனை குறைக்க எண்ணுவோர் தங்களது உணவு பட்டியளில் கட்டாயம் பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it