1. Home
  2. ஆரோக்கியம்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது.

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் .

தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

தயிரில் அமினோ ஆசிட் தைரோசின் என்னும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like