குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை கொடுத்து பாருங்க!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை கொடுத்து பாருங்க!

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை கொடுத்து பாருங்க!
X

பொதுவாக அனைத்து பருப்பு வகைகளிலுமே புரதச்சத்து உண்டு என்றாலும் உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிரம்பியுள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரவல்லவை.


கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடைத்த கடலை பருப்பு அருமருந்து. தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.இப்படிச் சாப்பிட்டு வருவதால் உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

இதயத்தை சீராக இயங்கச் செய்து ஆரோக்கியமான வாழ்வையும், நீடித்த ஆயுளையும் அதிகரிக்க உதவுகிறது.உடைத்த கடலை பருப்பில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம். எனவே குழந்தைகளுக்கு அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடக் கொடுப்பது மிகவும் நல்லது.

Tags:
Next Story
Share it