குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் இஞ்சி பிரண்டைத் துவையல்!

குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் இஞ்சி பிரண்டைத் துவையல்!

குழந்தைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் இஞ்சி பிரண்டைத் துவையல்!
X

தேவையான பொருட்கள் :

பிரண்டை -1கட்டு
இஞ்சி -சிறு துண்டு
புளி -சிறிதளவு
உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1கொத்து
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பிரண்டையில் உள்ள நார்களை நீக்கி, சுத்தம் செய்து விட்டு பொடியாக நறுக்கவும். இஞ்சியின் தோலையும் சீவி பொடியாக அரிந்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்புடன் ,தேவையான அளவு உப்பு புளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பிரண்டையையும் சேர்த்து அரைதெடுக்க அருமையான ,சத்தான இஞ்சி பிரண்டை துவையல் தயார். இந்தத் துவையல் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதோடு மேலும் சேரவிடாமலும் தடுக்கிறது.

Next Story
Share it