இதை தெரிஞ்சிக்கோங்க..! நீரிழவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடும்போது...
சர்க்கரை நோயுள்ளவர்கள் வாய்க்கு ருசியாக உணவு உட்கொள்ளமுடியாது. அசைவ உணவுகளை உண்ணுகிறவர்கள் சிக்கன், மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம். ஆனால் அவற்றை எண்ணெயில் வருத்து உண்ணக்கூடாது எனவும், சர்க்கரை நோயாளிகள் மட்டன் மற்றும் பீப் போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் மட்டன் சாப்பிடுவது நல்லதா அல்லது சிக்கன் சாப்பிடுவது நல்லதா என்ற பெரிய சந்தேகம் பலருக்கு உள்ளது.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ள நோயாளிகள் சிவப்பு இறைச்சியின் நுகர்வை குறைக்க வேண்டும். ஏனெனில் அதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்களை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சியில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஆடு மற்றும் ஆட்டுக்குட்டி இறைச்சி ஆகியவை அடங்கும்.
நீரிழிவு நோயாளிகளின் டயட்டில் சிக்கனை சேர்த்துக் கொள்வது பாதுகாப்பான, ஆரோக்கியமான தேர்வு தான். மெலிந்த புரதங்களால் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய அளவில் ஆபத்துகள் இருப்பதில்லை. ஆனால் சிவப்பு இறைச்சிகளை எடுத்துக் கொள்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாம் என்றாலும் அதை எப்படி சமைத்து எடுத்துக் கொள்கிறோம், எந்த அளவு எடுத்துக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.
அதேபோல சிவப்பு இறைச்சியை ஒப்பிடும்போது சிக்கனில் கொலஸ்டிரால் மிக மிகக் குறைவு. அதனால் டைப் 2 நீரிழிவு உள்ளவர்களாகவும் அசைவ உணவை விரும்பி சாப்பிடுகிறவராகவும் இருந்தால் சிவப்பு இறைச்சியை தவிர்த்துவிட்டு சிக்கனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நீரிழவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :
சிக்கன் சாப்பிடலாம் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற அர்த்தம் கிடையாது. அது எவ்வாறு சமைக்கப்படுகிறது, எந்த வடிவில் எடுத்துக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.
சிக்கன் சூப்பின் கிளைசெமிக் குறியீடு மிக மிகக் குறைவு. அதனால் சிக்கனை சூப் வடிவில் எடுத்துக் கொள்வது நல்லது.
சிக்கனை வேகவைத்தோ அல்லது க்ரில் செய்தோ எடுத்துக் கொள்ளலாம்.
எண்ணெயில் பொரித்த கபாப், ஃபிரைடு சிக்கன் வகைகளை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிக்கன் பொரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் மாவு வகைகள், பிரெட் க்ரம்ஸ் போன்றவை கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டவை. இதை எண்ணெயில் பொரிக்கும்போது டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகரிக்கும். அதனால் கட்டாயம் பொரித்த சிக்கனை தவிர்க்க வேண்டும்.
பிராய்லர் கோழி பிடிக்காதவர்கள் நாட்டுக் கோழி சாப்பிடலாம்.
தோல் நீக்கிய (skinless), எலும்பில்லாத (boneless) சிக்களை தேர்வு செய்யுங்கள். அதில் கொழுப்புச்சத்து மிகக் குறைவாக இருக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அளவையும் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கோழியின் மார்புப் பகுதியை (chicken breast) தேர்வு செய்வது இன்னும் நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு கார்டியோ வாஸ்குலர் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் சிக்கனில் மிகக் குறைவான அளவே கொழுப்புச்சத்து இருக்கிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துக்களைக் குறைக்கும்.
சிக்கனில் குறிப்பாக சிக்கன் சூப் போன்றவற்றில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. அதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் வைத்துக் கொள்ள முடியும்.
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் எடையைக் குறைப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு எடையை குறைக்க மிகச்சிறந்த புரோட்டீன் தேர்வாக சிக்கன் இருக்கும்.