1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! இரும்புச்சத்து குறைபாட்டிற்கு மாத்திரைகள் எடுக்காமல் இதை ட்ரை பண்ணி பாருங்க..!

1

 இரத்த சிவப்பணுக்கள் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கின்றன.. உடலில் போதுமான இரும்புச்சத்து இல்லாத நிலையில் உடல் இரத்த சிவப்பணுக்களில் பொதுமான பொருளை உற்பத்தி செய்ய முடியாது. குறிப்பாக ஆக்ஸிஜன் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஹீமோகுளோபின் எடுத்து செல்ல உதவுகிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடு உங்களை அன்றாட பணிகள் கூட செய்ய விடாமல் சோர்வை உண்டாக்கலாம்.

இந்த இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய மாத்திரைகள் எடுப்பது வழக்கமாகி வருகிறது. ஆனால் உணவு வழியாக போதுமான இரும்புச்சத்து பெற முடியும்.

கரிசலாங்கண்ணி வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என்று பூக்களின் நிறங்களின் அடிப்படையில் இவை நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி பரவலாக பார்க்கலாம். மஞ்சள் கரிசலாங்கண்ணி சற்று அரிதானது. சிவப்பும் நீலமும் இன்னும் அரிது.

பொதுவாக இந்த கரிசலாங்கண்ணி இலை உணவில் பொரியலாகவும், குழம்பாகவும், கூட்டாகவும் பயன்படுத்தி வந்தார்கள். இதை பல் துலக்கும் பொடிகளிலும் பயன்படுத்தி வந்தார்கள். மிக முக்கியமாக கூந்தல் வளர்ச்சியில் நரைமுடியை போக்கும் மிக முக்கியமான பொருளாக இது பார்க்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது.

கரிசலாங்கண்ணி செடியை வேருடன் பிடுங்கி மண் போக நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு இதை நிழலில் உலர்த்தவும். நன்றாக உலர்ந்ததும் வெயிலில் அரை மணி நேரம் வைத்து பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். அதோடு மெல்லிய வெள்ளைத்துணியில் சலித்து எடுக்கவும். இதில் ஆறு மடங்கில் ஒரு மடங்கு வறுத்து அரைத்த சீரகப்பொடியை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் அளவு இந்த பொடியை கலந்து குடிக்கவும். தொடர்ந்து ஒரு மண்டலம் குடித்து வந்தால் பலன் தெரியு,ம். இரும்புச்சத்து குறைபாட்டால் உண்டான சோர்வு, பலவீனம் போன்ற அறிகுறிகள் மறைய தொடங்கும். உடல் வலிமை பெறுவதை உணர்வீர்கள்.

மருத்துவ சிகிச்சைகளில் கரிசலாங்கண்ணி இலைச்சாறை எடுத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ஜலதோஷம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி கூந்தல் வளர்ச்சிக்கும், உச்சந்தலை அரிப்பு போக்கவும் மிகச்சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

கல்லீரலை பலப்படுத்தும் மூலிகை இது. இதில் இருக்கும் வேதியியல் கூறுகள் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றி தீங்கு விளைவிக்கும் இராசயனங்களிலிருந்து கல்லீரலை பாதுகாக்கின்றன.சேதமடைந்த கல்லீரல் மீண்டும் உருவாக இவை உதவுகிறது.

கரிசாலை நம் செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது. இரைப்பை புண்கள், வயிற்று வலை மற்றும் குமட்டல் போன்ற செரிமான மற்றும் வயிற்றுபிரச்சனைகளை தடுக்கிறது. 

கரிசலாங்கண்ணி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதன் முழு தாவரமும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கியை உயர்த்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக விலங்குகள் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. எல்லோருமே இதை சாப்பிடலாம். இது உடலை வலுவாக வைத்திருக்க செய்யும். பக்கவிளைவுகளையும் உண்டாக்காது. வாரம் இரண்டு நாள் இதை உணவில் சேர்த்து வந்தாலே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like