இதை தெரிஞ்சிக்கோங்க..! அந்தரங்க பகுதியை சுற்றி இருக்கும் கருமையை போக்க..
தயிர் இயற்கையாகவே சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க கூடியது. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தகூடியது.
கெட்டித்தயிரை எடுத்து சருமத்தில் அந்தரங்க பகுதியில் கருமை இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். தினசரி இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வந்தால் கருமை நீக்கி அந்த இடத்தில் சருமமும் சொரசொரப்பின்றி மென்மையாக இருக்கும்.
கடலை மாவு சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற செய்யும் பொருள். பாரம்பரியமாகவே இது அழகு பராமரிப்பில் சருமத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கடலை மாவு கொண்டு சருமத்தில் கருப்பு நிறத்தை போக்க முடியும்.
கடலை மாவுடன் காய்ச்சாத பால் கலந்து நன்றாக பேஸ்ட் போல் குழைக்க செய்யவும். இதை அடர்த்தியாக குழைத்து இந்த கலவையை தொடைப்பகுதியில் தடவி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு இதை 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை செய்யலாம்.
கற்றாழை சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் அதிக நன்மை செய்யகூடியது. இதை எல்லா சருமத்தினரும் பயன்படுத்தலாம். சருமத்துக்கு புத்துனர்ச்சி அளிக்க கூடியது. இதன் ஜெல் ஆனது தாதுக்கள் மற்றும் வைட்டமின்களால் செறிவூட்டப்படுகிறது. இது கொலாஜன் சுரப்பை அதிகரிக்க செய்யும். இது சருமத்தின் கருமையை நீக்கவும் செய்கிறது.
கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை எடுத்து பயன்படுத்தலாம். முன்னதாக கற்றாழையை இரண்டாக நறுக்கி நீரில் ஊறவிடவும் அதன் மஞ்சள் நிற திரவம் வெளியேறிய பிறகு உள்ளிருக்கும் ஜெல்லை சருமத்தின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இதை தினமும் செய்யலாம். கருமை மறையும் வரை செய்து வரலாம்.
சருமம் ஒளிர்வதற்கு மட்டும் அல்லாமல் கிருமிகள் அண்டாமல் இருக்கவும் மஞ்சள் உதவும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் இது உணவு, அழகு, வைத்தியம் என அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை போன்றே ஆரஞ்சு சாறு இயற்கையான ப்ளீச் முகவர் ஆகும்.
எலுமிச்சை நீர்த்து சருமத்துக்கு பயன்படுத்தினாலும் அவர்களுக்கு உணர்திறன் சருமம் இருந்தால் அது பாதிப்பை உண்டாக்கும். இவர்கள் ஆரஞ்சு சாறில் மஞ்சள் தூள் கலந்து குழைத்து அந்தரங்க பகுதி சுற்றி தொடைபகுதியில் தடவினால் சருமம் கருப்பு நீங்கும்.
பன்னீர் சருமத்தை ஈரப்பதமாக்க கூடியது. சந்தனம் சருமத்தின் நிறமாற்றத்துக்கு உதவக்கூடும். இவை இரண்டும் கோடைக்கேற்ற சூப்பர் பராமரிப்பு பொருள்கள். இது எல்லா சருமத்தினருக்கும் ஏற்றவையும் கூட.
பன்னீரில் சந்தனத்தூள், அல்லது சந்தனக்கட்டையை உரைத்து பேஸ்ட் போல் குழைத்து அந்தரங்க பகுதியின் கருமையான இடத்தில் தடவி எடுக்கவும். தினமும் இரவு நேரத்தில் இந்த பேஸ்ட் தடவி வரலாம். சிலருக்கு தொடைப்பகுதியில் சொரசொரப்பாக இருக்கும், அவர்களுக்கு இந்த பேஸ்ட் உதவும்.
சமையலறையில் எப்போதும் ஸ்டாக் இருக்கும் உருளைக்கிழங்கு கருமையை போக்குவதில் முதன்மையானது. இது இயற்கையான ப்ளீச்சிங் பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை ஒளிர செய்யகூடும்.
உருளைக்கிழங்கை இரண்டாக அல்லது நான்காக வெட்டி அதன் சாறு கீழே விடாமல் தொடைபகுதியில் கருமை இருக்கும் இடத்தில் வைத்து வட்ட இயக்கமாக மசாஜ் செய்து விடவும். அல்லது உருளைக்கிழங்கு சாறு எடுத்து சாறை பஞ்சில் தொட்டும் தொடையில் தடவி எடுக்கலாம். தினமும் குளிப்பதற்கு முன்பு அரை மணி நேரத்துக்கு முன்பு இதை தடவி விடவும். தொடர்ந்து செய்து வந்தால் தொடை கருமை நீங்கிவிடும்.