1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! தர்பூசணி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

1

தர்பூசணியில் உள்ள விதைகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

தர்பூசணி விதைகளை ஸ்நாக்ஸ் நேரங்களில் வறுத்து எடுத்துக்கொள்ளலாம். மற்ற நொறுக்குத் தீனிகளோடு ஒப்பிடும்போது தர்பூசணி விதையில் நம்முடைய உடலுக்கு நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் கிடைக்கும்.  

உடல் எடை குறைய : தர்பூசணி விதைகளில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். 

இரத்த சர்க்கரை அளவு குறைய: இதில் உள்ள மெக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அளவுள்ள தர்பூசணி விதையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி சூடு குறைந்தவுடன் 3 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க: தர்பூசணி விதைகளில் இரும்புச் சத்து மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்பட: தர்பூசணி விதையில் மோனோ அன்சாச்சுரேட், பாலி அன்சாச்சுரேட் மற்றும் ஃபேட்டிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

நரம்புமண்டலத்தை வலிமைப்படுத்த உதவுகிறது.

உடலில் ஏற்படும் அதிகப்படியான சோர்வை நீக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

தர்பூசணி விதைகயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கின்றது.

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.

தர்பூசணி விதையின் எண்ணையை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. 

தர்பூசணியின் விதைகள் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க பயன்படுகிறது.

வைட்டமின் பி9 நிறைந்துள்ளதால் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். இதனால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like