இதை தெரிஞ்சிக்கோங்க..! நம் முன்னோர்கள் சும்மாவா எல்லா சமையல்களில் வெங்காயத்தைச் சேர்த்து இருப்பார்கள்..!
வெங்காயம் இல்லாமல் நமது வீட்டில் எந்தச் சமையலும் நடைபெறாது. வெங்காயமும் தக்காளியும் நமது அடுப்பங்கறைக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கும்.
குறிப்பாக தமிழக உணவுகளில் வெங்காயம் இல்லாமல் உணவுப் பொருள்கள் சமைப்பது மிகவும் அரிதானது.
நம் முன்னோர்கள் சும்மாவா எல்லா சமையல்களில் வெங்காயத்தைச் சேர்த்து இருப்பார்கள்.
புற்றுநோய்க்கான மருந்து உள்ளிட்ட எண்ணிடலங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியிருக்கிறது. ஒரு கப் வெங்காய ஜூஸ் உங்களுக்கு எண்ணற்ற மருத்துவ பலன்களை அளிக்கிறது என்றால் நம்புவீர்களா?
வெங்காய ஜூஸ் எப்படி தயாரிப்பது? அதை எப்படி பயன்படுத்துவது என்பதைக் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
வெங்காய ஜூஸ் செய்யும் முறை
வெங்காயம் ஜூஸால் ஏற்படும் நன்மைகளை பார்ப்பதற்கு முன்னாள் வெங்காய ஜூஸ் செய்வது எப்படி என்பதை முதலில் பார்ப்போம்.
3 அல்லது 4 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு தோலினை உறித்துக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைத்த வெங்காயத்தின் சாறை பிழிந்து எடுக்க வேண்டும்
புற்றுநோயைக் குணப்படுத்தும்
வெங்காயத்திலுள்ள குர்செடின், அந்தோசயின்கள் மற்றும் ஆர்கனோசல்பர் உள்ளிட்ட புற்றுநோய் எதிர்ப்பான்கள் நிறைந்துள்ளன.
இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குர்செடின் எனும் வேதிப்பொருள் மூளை மற்றும் நுரையீரல் புற்றுநோய்களுக்கு எதிராகப் போராடுகிறது.
மேலும் இதிலுள்ள இரும்புச்சத்து பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராகவும் போராடுகிறது. இந்த குர்செடின் புற்றுநோய்க்கட்டிகளை அழிக்கும் வல்லமை படைத்தது.
சர்க்கரை நோய்
இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை வெங்காயம் குறைக்கிறது. குளுக்கோஸ் அளவு குறைவது சர்க்கரை வியாதியுடைவர்களுக்கு அருமருந்தாகும்.
குறைந்த கலோரிகளைக் கொண்டு வளர்சிதை மாற்றங்களுக்கு பேருதவி செய்கிறது. மேலும் இது பிளாஸ்மா குளுக்கோஸ் அளவையும் குறைக்கிறது.
அழற்சிக்கு எதிராக
பசுமையான வெங்காய ஜூஸ் பருகுவோர்களுக்கு நாள்பட்ட வலியையும், அழற்சியைக் குணப்படுத்துகிறது. அழற்சியின் காரணமாக தோன்றும் எலும்பு நோய்களுக்கு எதிராகவும் வெங்காய ஜூஸ் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
வெங்காயத்தில் செலேனியம் எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த செலேனியம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. புரதத்தை உற்பத்தி செய்யவும் , கால்சியத்தை கடத்தவும் பயன்படுகிறது.
ஆஸ்துமா
வெங்காயம் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை நீக்குகிறது. மேலும் நுரையீரலை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
பார்வைக் கோளாறு
வெங்காயத்தில் உள்ள நுண்பொருட்கள் கண்ணில் ஏற்படக்கூடிய அழற்சிகளான வெண்படலம் மற்றும் கண் இமை அழற்சி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. கண்புரை வளர்ச்சியை வெங்காயம்
தடுக்கிறது.
நகச்சுற்று :
மனிதர்களுக்கு பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்து கேண்டிடா அல்பிகன்ஸ் மற்றும் பேத்தோஜெனிக் ஈஸ்ட் போன்றவற்றிற்கு எதிராக வெங்காயம் போராடுகிறது.
மேலும் வெங்காய ஜூஸை நகச்சுட்டி ஏற்பட்ட இடத்தில் தடவுவது சிறந்ததாக இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். ஒரு வாரத்திற்கு இதை செய்து வந்தால் நகச்சுட்டி பறந்து போய்விடும்.
காது தொற்று :
பல் காது இது இரண்டிலும் தொற்றுகளோ வலியோ ஏற்பட்டால் தூக்கத்தை இழக்க வேண்டியது தான். அதிலும் காதில் ஏற்படும் தொற்றைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
வெங்காய ஜூஸ் இதற்கு சிறந்த பலன்களைத் தருகிறது. என்றாலும் கூட மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்படாததால் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க
வேண்டும்.
தூக்கம் :
மன அழுத்தத்திற்கு எதிராகப் போராடும் நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கிறது. பல ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
கருவுருதல்
வெங்காயச் சாறை பருகுவதால் ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. டெஸ்ட்ரோஜன் விந்து உற்பத்தியை ஆதரிப்பதால் கருவுருதல் செயல்பாட்டுக்கு
பெரிதும் உதவுகிறது.
முகப்பரு
முகப்பரு பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளால் ஏற்படுகிறது. வெங்காயத்தில் உள்ள நுண்பொருட்கள் இது இரண்டுக்கும் எதிராகப் போராடுகிறது.
எப்படி பயன்படுத்துவது
வெங்காயச் சாற்றை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் உங்கள் முகத்தை சூடான நீரில் கழுவவும்.
சாற்றைத் தடவும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்சிட்டிவ் தோல்களுக்கு வெங்காய சாறு உகந்தது அல்ல. அதே சமயத்தில் கொப்புளங்கள் இருக்கும் இடத்திலும் தடவக் கூடாது.
முகச் சுருக்கம் :
சிறிய வயதிலேயே வயதானத் தோற்றத்தை தோளில் உள்ள சுருக்கங்கள் தந்துவிடும். வெங்காயத்தில் உள்ள சல்பர் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. கொலாஜன் முன்கூட்டிய வயதான தோற்றத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
முடி :
முன்பு பார்த்த மாதிரி வெங்காயத்தில் உள்ள சல்பர் கொலாஜனை ஊக்குவிக்கிறது. கொலாஜன் முடியின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது