1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! நீராகாரம் என்கிற பழைய சோற்றில் இவ்வளவு மகத்துவமா..?

1

நம் முன்னோர்கள் வாழ்வோடு நீக்கமற கலந்தது பழைய சாதம்.காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயத்தோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது.

சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். அதன் நீர் நீராகாரம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருக்கும்.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. 

நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், 'பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். 

சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது.

பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவது நலம் பயக்கும். 

‘‘பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?’’  இது பற்றி சித்தமருத்துவம் என்ன கூறுகிறது. ‘அகத்தியர்  குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில், பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு  பாடலே இருக்கிறது. 

பொதுவாகவே, வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும்.  பித்தம் என்பது, நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும்  அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு (Digestive Fire)   அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும்.  உடல் எரிச்சல் ஏற்படும். இவை  எல்லாவற்றையும், சமன் செய்து, உடலை மெருகூட்டுகிறது பழைய சோறு. 

‘பிரமேயம்’  எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத் தூண்டும், ஆக்ரோஷம் ஆகிய  உணர்வுகளை, இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக்  கட்டுப்படுத்துவால், அதன் எதிர்க் குணமாக உடலில் கபத்தின் தன்மை  அதிகரிக்கிறது. 

அதனால் தான், பழையது சாப்பிட்டதும், நமக்குத் குளுமையான  உணர்வு ஏற்படுகிறது. சுருங்கச் சொன்னால்,

 "ஆற்று நீர் வாதம் போக்கும்,  அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்’’. 

ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். 

அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். இதனை பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய்கள் நீங்கும்.

சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும்

இதிலிருந்தே பழைய சோற்றின் அருமையை  தெரிந்து கொள்ளலாம்தானே.
 

Trending News

Latest News

You May Like