1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! ஒரே நாளில் வெள்ளை முகம் சாத்தியமா?

1

சமூக வளைதளங்களில் அழகு குறிப்பு குறித்த சுய கட்டுரைகள் தடையின்றி வந்துகொண்டிருக்கிறது.  பெரும்பாலும்  ஒரே நாளில், ஒரு மணி நேரத்தில், ஐந்து நிமிடத்தில் என்ற தலைப்புகளை தாங்கியபடி இருக்கிறது. இவை சாத்தியமா என்ற சந்தேகத்தை சரும பராமரிப்பு மருத்துவரிடம் முன்வைத்தோம். 

நீங்கள் சொன்ன இந்த கட்டுரைகளை எந்த சரும பராமரிப்பு மருத்துவரும் அனுபவமிக்க அழகு கலை நிபுணர்களும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அனுபவமிக்க அழகு குறிப்பு நிபுணர்கள் சொல்லியிருந்தாலும் தற்காலிகமாக முகம் பளிச் என்று ஆக்கும் குறிப்புகளைமட்டுமே சொல்லியிருப்பார்கள்.அந்த வகையில் உடனடியாக முகத்துக்கு பளிச் வெண்மை தரும் பொருள்களை பார்க்கலாம். அதில் ஒன்று பாரம்பரியமாக நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பாசிபயறு. 

பாசிபயறை முழுதாக வாங்கி, ஈரமில்லாமல் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துகொள்ளுங்கள். தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் இதனுடன் பால் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுங்கள். சோப்புக்கு பதிலாக இந்த பயத்தம் மாவை தேய்த்தும் குளிக்கலாம்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது எந்தவிதமான பக்கவிளைவும் வராது. அதோடு முகம் எப்போதும் பளிச் என்று இருக்கும். இனி முகத்துக்கு க்ரீம் பயன்படுத்துவதை விட இந்த மாவு பயன்படுத்துங்கள். 

1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2  ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை  தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.

சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற  வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.

 

1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ  வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து  பயன்படுத்தலாம். 

சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை  சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின்  வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

 

Trending News

Latest News

You May Like