1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..?

1

முட்டையின் அவசியம் உணர்ந்துதான் என்னவோ பலரும் வாரம் தவறாமல் டஜன் கணக்கில் முட்டையை வாங்கி வீட்டில் இருப்பு வைத்துவிடுவார்கள். முன்பெல்லாம் முட்டைக்கென்று தனியாக மூங்கில் கூடை இருக்கும். அதை உத்தரணியில் தொங்கவிட்டு அதில் முட்டையை அடுக்கி வைப்பார்கள். பிறகு முட்டை வடிவத்தில் பிளாஸ்டிக் முட்டை பாக்ஸ் வந்தது. இதில் முட்டைகளை வாங்கி வைத்துவிட்டால் முட்டை உடையாமல் இருக்கும். பிறகு எப்போது அத்தியாவசிய பொருள்கள் போல் எல்லோரும் ஃப்ரிட்ஜ் வாங்கி பயன்படுத்த தொடங்கினோமோ அப்போதே வீட்டில் தேவையானது தேவையில்லாதது எல்லாமே ஃப்ரிட்ஜ்ஜுக்கு அடக்கமாகிவிட்டது. முட்டையையும் டஜன் கணக்கில் வாங்கி ஃப்ரிட்ஜ்ஜுக்குள் அடுக்க தொடங்கிவிட்டார்கள் இல்லதரசிகள். அப்படி ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைத்து சாப்பிடும் முட்டை உடலுக்கு நல்லதா அல்லது கெடுதல் செய்யகூடியதா என்பதை தெரிந்து அதற்கேற்ப சேமிப்பது தான் நல்லது.

முட்டையை பொதுவாக பிரிட்ஜில் வைக்கக்கூடாது என கூறுகின்றனர். ஏனெனின் பிரிட்ஜில் வைக்கப்படும் முட்டையின் சுவை மாறிவிடுமாம். இது பொதுவாக கூறப்படும் ஒரு கருத்து. மற்றொருபுறத்தில் பல நாட்கள் முட்டைகள் கெடாமல் இருக்க பிரிட்ஜில் வைப்பதில் தவறில்லை என்றும் கூறப்படுகிறது. 

முட்டைகளைப் பொறுத்தவரை சுத்தம் செய்து பிரிட்ஜில் வைக்கலாம். பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக இப்படி வைப்பதில் தவறில்லை. ஆனால், பிரிட்ஜில் வைத்த முட்டையை நீண்ட நேரம் வெளியில் வைத்திருக்கக்கூடாது. மற்ற முட்டைகளைக் காட்டிலும் அவற்றில் தொற்றுகள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல சுத்தமான முட்டையை பிரிட்ஜில் வைக்கலாம். உடைந்த முட்டைகளை பிரிட்ஜில் வைப்பது சரியாக இருக்காது. 

முட்டைகளை வாங்கிய உடனேயே சாப்பிடுங்கள், முட்டையின் ஆயுள் ஒரு மாதம். முட்டைகளை வெளியில் வைத்தால் 7 நாட்களில் கெட்டுவிடும். வாங்குவதற்கு முன், கடையில் எத்தனை நாட்கள் முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்த்து, அதன் பிறகு சேமியுங்கள்.

கெட்டுப்போன முட்டைகளை எவ்வாறு கண்டறிவது?

முட்டையை உடைக்காமல் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் நனைக்கவும். முட்டை தண்ணீருக்கு அடியில் நேராக இருந்தால், முட்டை புதியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முட்டை தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தால் முட்டை கொட்டுப்போனது என்பதை புரிந்து கொள்ளுங்கள், அவற்றை உடனே தூக்கி எறியுங்கள். முட்டையை காதுக்கு அருகில் கொண்டு வந்து குலுக்கவும். தெறிக்கும் சத்தம் இருந்தால் முட்டை கெட்டுவிட்டது. புதிய முட்டையை அசைக்கும்போது அதிக சத்தம் இருக்காது. ஒரு கிண்ணம் அல்லது தட்டில் முட்டையை உடைக்கவும். முட்டையிலிருந்து கெட்ட வாசனை வந்தால், அது கெட்டுப் போய்விட்டது. கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி ஒரு பச்சை வளையம் உருவாகினால், முட்டை பாதுகாப்பானது. சிவப்பு நிறம் தோன்றினாலும், அது பாதுகாப்பானது.

Trending News

Latest News

You May Like