1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்வது சரியா ?

1

எந்தவிதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதைச் செய்வதற்கு நமது உடலில் போதுமான அளவு சக்தி இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், உடலில் சக்தி வேண்டும் என்பதற்காக, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, உடற்பயிற்சிகளைச் செய்தால் என்ன ஆகும் தெரியுமா. 

எடுத்துக்காட்டாக, நன்றாக உணவு உண்டபின், குறைந்தது 30 நிமிடங்கள் வரை நீச்சல் குளத்திற்குள் குதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு குதித்தால், நமது தசையில் சுளுக்கு ஏற்படும். பளு தூக்குதல் போன்ற அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு 30 முதல் 40 நிமிடங்களுக்கு முன்பாக சிறிதளவு திண்பண்டங்களைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சிக்கு முன் கார்போஹேட்ரேட்டுகள் மிக எளிதாக சொிமானம் அடைந்து, அவை நமக்கு சக்தியை வழங்கும். வாழைப்பழங்கள், நிலக்கடலை வெண்ணெய், வறுத்த நிலக்கடலை, க்ரனோலா கட்டிகள் போன்ற திண்பண்டங்களை சாப்பிடலாம்.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு, சிறு குடலை அடைய 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். சிறு குடலை அடையும் உணவு படிப்படியாக சொிமானம் அடையத் தொடங்கும். ஒருவேளை நாம் மிதமான அளவு சாப்பிட்டால், அது சற்று வேகமாக சொிமானம் அடையும். அதாவது அந்த உணவு ஏறக்குறைய 2 மணி நேரத்திற்குள் சிறு குடலை அடைந்து சொிக்கத் தொடங்கிவிடும். ஒருவேளை நம்மால் நீண்ட நேரம் காத்திருக்க முடிந்தால், கண்டிப்பாக நாம் சாப்பிட்ட உணவு சொிமானம் அடைந்திருக்கும். அதனால் நமது வயிற்றில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. நாம் வயிறு நிறைய சாப்பிட்டால் அது சொிமானம் அடைய குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரைக் காத்திருக்க வேண்டும். அதற்குப் பின்பு தான் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

அதே நேரம் நாம் வெறும் வயிற்றில் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாது. ஆகவே உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பாக, மிக எளிதாகச் சொிக்கக்கூடிய மற்றும் சக்தியைக் கொடுக்கக்கூடிய உணவுகளை உண்பது நல்லது. குறிப்பாக ஓட்ஸ் உணவு, புரோட்டீன் ஷேக்ஸ், மற்றும் தயிா் போன்ற உணவுகளை உண்ணலாம்.

நீந்துதல், ஓடுதல் அல்லது அதிதீவிர உடற்பயிற்சிகளைச் செய்ய முடிவெடுத்துவிட்டால், அதற்கு முன்பாக நாம் உண்ட உணவு சொிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த உடற்பயிற்சிகளைச் செய்வதற்குத் தேவையான ஆற்றல் அந்த உணவு சொித்த பின்புதான் கிடைக்கும். நாம் நீண்ட தூரம் ஓடும் பயிற்சியைச் செய்ய முடிவு எடுத்திருந்தால், ஓட்டத்தைத் தொடங்குவதற்கு 2 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பாக உணவு அருந்திவிடுவது நல்லது. ஏனெனில் அந்த உணவின் மூலம் பெறும் காா்போஹைட்ரேட்டுகளில் இருந்து கிடைக்கும் ஆற்றலை, நாம் ஓடும் போது நமது உடல் பயன்படுத்திக் கொள்ளும். நாம் அதிதீவிரமாக உடற்பயிற்சிகளைச் செய்யும் போது, நமது இரத்தத்தில் காா்போஹைட்ரேட்டுகள் இல்லாமல் போனால், நமது உடலானது, கிளைகோஜன் என்று அழைக்கப்படும் நமது உடலில் தேங்கி இருக்கும் சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கிவிடும்.

வயிறு நிறைய சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால்

நன்றாக வயிறு நிறைய சாப்பிட்ட பின் உடற்பயிற்சிகள் செய்தால், அதனால் ஏற்படும் பெரும்பாலான பக்க விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் ஒருசில பக்க விளைவுகள் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்கும். நன்றாக சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சிகள் செய்தால், சொிமானக் கோளாறுகள், குமட்டல், அமிலம் பின்னோக்கி வடிதல், சுளுக்கு, வயிறு வீக்கம் மற்றும் வாந்தி போன்ற பக்க விளைவுகள் பொதுவாக ஏற்படும். நாம் சாியான நேரத்திற்கு உணவு உண்ணவில்லை என்றால், நமது இயக்கம் பாதிக்கப்படும். முழு உணவை சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலோ அல்லது ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினாலோ நமக்கு மந்தமாக இருக்கும். மேலும் உடற்பயிற்சியின் போது வழக்கமாக இருக்கும் ஆா்வம் மற்றும் சுறுசுறுப்பு போன்றவை காணாமல் போகும்.

Trending News

Latest News

You May Like