1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! சூடாக நாம் காலை உணவு எடுத்துக் கொள்ளவது ஆரோக்கியம் அளிக்குமா?

1

நாள் முழுவதும் சூரியனின் இயக்க நிலையை பொறுத்தே நமது செரிமான நிலையும் அமைவதாக ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது. அதாவது ஜீரோ மதிப்பீட்டில் இருந்து நமது உடலும் அதன் இயக்க நிலையை தொடங்குகிறது. எனவே நமது காலை உணவு எவ்வாறு இருக்க வேண்டும்? சூடாக நாம் காலை உணவு எடுத்துக் கொள்ளவது ஆரோக்கியம் அளிக்குமா? 

நாம் குளிர் காலத்தை சமாளிக்க சூடான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வமே தவிர அவை சரியாக செரிமானம் ஆகிறதா இல்லை வேறு ஏதும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை.

காலை உணவு ஒரு நாளின் முதல் உணவு என்பதால் அதன் சூடான தன்மை செரிமான அமைப்பு வெப்பமடைய செய்கிறது.நாள் முழுவதும் உணவை ஜீரணிக்கக்கூடிய வகையில் நமது உடலை தயார்படுத்த காலை உணவை மென்மையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மதிய உணவை ஜீரணிக்கும் வகையில் நமக்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தின் படி நண்பகல் 12 முதல் 2 மணிக்குள் மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சூரியன் வானத்தில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரம் நமது செரிமான திறன் உகந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

குளிர்ந்த காலை உணவை உட்கொள்வது என்பது எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றுவது போன்றதாகும்.எனவே காலை உணவாக புதிதாக சமைத்த கஞ்சி, பழங்கள், வேகவைத்த பருப்பு வகைகள், வேகவைத்த காய்கறி சூப் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும்.செரிமான நொதிகள் செயல்பட சூடான உணவுகள் தேவை என்பதால் ஏற்கனவே செய்த உணவுப் பொருளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான டீ, காபி, காரமான உணவுகள், புளிப்பான பழங்கள், இனிப்பு உணவுகள் தக்காளி, வாழைப்பழம், பேக்கரி வகைகள், குளிர்பானங்கள், முழு தானியம் ஆகியவை எந்த கால நிலையிலும் உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like