1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! தலைக்கு எண்ணெய் தேய்த்து கொள்வது நல்லதா கெட்டதா..?

1

ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் முறையை தான் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதி;ல்லை.

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.

முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.

தலைக்கு அதிக அளவில் எண்ணெயை வைக்கக் கூடாது. இவ்வாறு எண்ணெய் வைத்தால், அது தலைமுடியின் வேர்களில் நிரம்பிவிடும். இப்படி செய்வதன் மூலம், முடிக்கு சீரான வளர்ச்சிக் கிடைக்காமல் முடி கொட்டிவிடும்.

எண்ணெய் தலைக்கு தேய்த்தால் ஒரு சிலர் ஒரு வாரத்திற்கும் மேல், தலைக்கு குளிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் சளி பிடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், அவ்வாறு தலைக்கு எண்ணெய் தேய்த்தால், 2 நாட்களுக்குள் குளித்துவிட வேண்டும். இல்லையென்றால், முடிக்கொட்டும் அபாயம் இருக்கிறது.

குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பே தலையில் எண்ணெய்யை ஊறவைக்க வேண்டும். அப்போது தான் அது நன்றாக வேர்களில் ஊடுருவும். சிலர் தலை முடியில் உள்ள சிக்கல்களை எடுப்பதற்காகவே, எண்ணெய்யை வைத்து எடுப்பார்கள். ஆனால், இப்படி செய்தால் அது இன்னும் ஆபத்தாக முடியும். சிக்கல் எடுத்த பிறகு தான், முடியில் எண்ணெய்யை தடவ வேண்டும்.

நல்ல தூக்கம்: எண்ணெய் தேய்த்து குளித்தால், உடலிலுள்ள உஷ்ணம் தணியும்.. நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.. தலைமுடி வலுவாகும்.. உடல் வலி அதிகமாக இருந்தாலும், அதனை எண்ணெய் குளியல் போக்கிவிடும்.. மூட்டு வலி, முழங்கால் வலி இருப்பவர்களுக்கும், எண்ணெய் குளியல் கை கொடுத்து உதவும்.வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளிலுந்தும் தீர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் தோலில் பளபளப்பும் கிடைக்கிறது.. அதிலும் வறண்ட தோல் உள்ளவர்கள், கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்..

உடல் சூடு உள்ளவர்களும் எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் உடல் குளிர்ச்சியாகும். அதுவும், காலையில் எண்ணெய் தேய்ப்பதே சிறந்தது. காரணம், சூரியனிலிருந்து வரும் வைட்டமின் D சத்துக்கள் நமக்கு மிகவும் நல்லது..

ஆன்மீக ரீதியாக பார்த்தால், எந்தெந்த கிழமைகளில் குளிக்க வேண்டும் என்று வகைப்படுத்தி, அதற்கான நேரமும் குறிக்கப்பட்டுள்ளது..

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.. அத்துடன், செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள் என்பதால், இந்த நாட்களில் கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதன்படி எண்ணெய் குளியல் என்றாலே, காலை 8 மணிக்கு முன்பு, அல்லது மாலை 5 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதன், சனிக்கிழமையில் குளிப்பதையே வழக்கப்படுத்தி கொள்ள வேண்டுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும் என்பார்கள்.

தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபடக்கூடாது.. அதேபோல, குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. பெண்கள், தலையில் எண்ணெய் வைத்துவிட்டால் உடனே தலைமுடியை முடிந்து கொள்ள வேண்டும். தலைவிரி கோலமாக வீட்டில் நடமாட கூடாது.. அதேபோல பெண்கள் எண்ணெய் வைத்து தலைவிரி கோலத்தில் இருந்தால், வீட்டை விட்டு யாரும் வெளியே பயணிக்க கூடாது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து தலைமுதல் கால் வரை ஊறவைத்து குளிக்கலாம்.. எண்ணெய் வைத்து குளிக்கும்போது, நம்மை பிடித்த தோஷங்களும் விலகும் என்பார்கள்..

Trending News

Latest News

You May Like