1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! பச்சை நிறமுள்ள உருளைக்கிழங்கு விஷமா?

1

நாம் சாப்பிடும் சாதாரண வகை உருளைக்கிழங்குகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். அப்படி நீங்கள் வாங்கும் உருளைக்கிழங்கில் பச்சை நிறமாக இருப்பின் இந்த பாகங்களை மட்டும் வெட்டி வீசி விடுங்கள். ஒரு உருளைக்கிழங்கில் பச்சை திட்டுகள் உள்ளது எனில், அது சோலனைன் எனப்படும் நச்சு கலவையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தொழில்நுட்ப ரீதியாக உருளைக்கிழங்கில் அந்த பச்சை நிறத்தை குளோரோபில் கொடுக்கிறது. இந்த நிறமியானது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், அதை வெட்டி எறிவதே நல்லது. ஏனெனில், இந்த உருளைக்கிழங்கை சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்போது இதில் அதிக அளவு சோலனைன் உற்பத்தியாகக் கூடும். சோலனைன் அதிகமாக உள்ள உருளைக்கிழங்கை நீங்கள் உட்கொண்டால் அது குமட்டல், தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அதையே நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது காய்ச்சல், மெதுவான சுவாசம் மற்றும் வயிற்றில் வலி ஆகியவை ஏற்படுகின்றன.

உருளைக் கிழங்கை சேமிப்பது எப்படி?

*அதிக வெப்பநிலையை அடையும் அல்லது அதிக சூரிய ஒளி பெறும் பகுதிகளில் உருளைக்கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும். எப்போதும் குளிர்ந்த இருண்ட பகுதியில் சேமிக்கவும்.

*உருளைக்கிழங்கை வாங்கியவுடன் கழுவக் கூடாது. இதனால் அவை அழுகும் நிலை உண்டாகலாம். உருளைக்கிழங்கில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதன் இருப்பு நாள் குறைகிறது. அதேபோல், அதிக வெப்பம் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டாம். இதனாலும் உருளைக்கிழங்கு அழுகலாம். அதே நேரம், உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். குளிர்சாதன பெட்டியின் அதிகபட்ச குளிர்ச்சி, உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றம் செய்து விடுகிறது.

*துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதப் பைகளில் உருளைக் கிழங்கை சேமிப்பது அதன் ஆயுளை நீட்டிக்க சிறந்த சூழலை வழங்குகின்றன.

*உருளைக்கிழங்கை சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டாம். ஈரப்பதம் ஆரம்பகால கெடுதலை ஊக்குவிக்கிறது.முளைகள்’ உருளைக்கிழங்கு வளர முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். உருளைக்கிழங்கை நன்கு காற்றோட்டமான, உலர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைப்பது முளைப்பதைக் குறைக்கும். உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் முளைகளை வெட்டிவிடவும்.

Trending News

Latest News

You May Like