1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! குதிகால் வலிக்கு பாட்டி வைத்தியம்..!

1

குதிகால் வலி காரணங்கள்:-

  1. உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக குதிகால் வலி ஏற்படுகிறது.
  2. அதிக நேரம் நின்று வேலை செய்ப்பவர்களுக்கு இந்த குதிகால் வலி அதிகமாக ஏற்படுகிறது.
  3. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த குதிகால் வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  4. பெண்கள் அதிகமாக ஹீல்ஸ் வைத்த காலனியை பயன்படுத்துவத்தினாலும் இந்த குதிகால் வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஐஸ் கட்டி

குதிகால் வலி உள்ளவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை. இந்த வைத்தியத்தை தினமும் செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.

இதற்கு ஒரு காட்டன் துணியை எடுத்து அவற்றில் இரண்டு அல்லது மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து கட்டி பாதங்களில் ஓத்திடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு முறை செய்து வர நல்ல மாற்றத்தை உணர முடியும்.

மசாஜ்

கால் பாதங்களுக்கு சிறிது நேரம் மசாஜ் கொடுப்பதன் மூலம், பாதங்களில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் அடைய செய்து, தசைகளில் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவவும். இதனால் குதிகால் வலி குறைய ஆரம்பிக்கும்.எனவே குதிகால் வலி பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு முறை கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள்.

இஞ்சி

தசை பிடிப்புகள் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படும். இதற்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாகிறது.எனவே சாப்பிடும் உணவுகளில் அதிகளவு இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தினமும் ஒரு முறை இஞ்சி டீ அருந்தி வாருங்கள். நல்ல பலனை உணர முடியும்.

ஆப்பிள் சீடர் வினிகர்:

இந்த குதிகால் வலிக்கு ஒரு சிறந்த வைத்தியமாக ஆப்பிள் சிடர் வினிகர் விளங்குகிறது. ஒரு கப் தண்ணீரில், 1/4 கப் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு அந்த நீரை ஒரு காட்டன் துணியால் நனைத்து, குதிகால் வலி ஏற்படும் பாதங்களில் ஓத்திடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாளடைவில் இந்த குதிகால் வலி குணமாகிவிடும்.

Trending News

Latest News

You May Like